தோனியின் All Time சாதனையை முறியடித்த ரோகித் சர்மா..! வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அட்டகாசம்..

Advertisement

Rohit Sharma Breaks MS Dhoni’s All Time Record in Tamil

நாம் அனைவருக்குமே விளையாட்டு என்றால் மிக மிக பிடிக்கும். அதனால் அதனை விளையாடுவது அல்லது விளையாடுவதை பார்ப்பது நமக்கு மிக மிக பிடிக்கும். அதிலும் குறிப்பாக ஒரு சிலருக்கு ஒரு சில விளையாட்டு தான் பிடிக்கும். அப்படி பலருக்கும் பிடித்த விளையாட்டுகளில் ஒன்று தான் கிரிக்கெட். அப்படி நம்மில் பலருக்கும் பிடித்த கிரிக்கெட் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதில் நமக்கு மிகுந்த ஆர்வம் இருக்கும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக விளையாட்டுகள் பற்றிய அனைத்து தகவல்களையும் பதிவிட்டு வருகின்றோம். அதேபோல் தான் கிரிக்கெட் விளையாட்டு பற்றிய ஒரு தகவல் தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து அது என்ன தகவல் என்று அறிந்து கொண்டு மகிழுங்கள்.

வெஸ்ட் இண்டீஸை தொம்சம் செய்யும் இந்தியா:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியை கைப்பற்றியது இந்திய.

இந்த வெற்றியால் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி ஜூலை 20ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் இருக்கும் குயின்ஸ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது.

இந்நிலையில் ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்க்க நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

உலகக்கோப்பை விளையாட போகும் 10 அணிகளுக்கும் கெடு விதித்த ICC

இந்திய அணியில் காயமடைந்த சர்துல் தாக்கூருக்கு பதிலாக முகேஷ் குமார் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற நிலையில் விராட் கோலி 500 போட்டியில் விளையாடிய 4வது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மீண்டும் ஆரம்பம் முதலே நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

அதில் ஜெய்ஸ்வால் சற்று மெதுவாக விளையாடிய நிலையில் கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி முதல் ஆளாக அரை சதமடித்து அசத்தினார்.

ரோகித் சர்மாவின் சாதனைகள்:

Rohit sharma t20 record in tamil

அவரை பார்த்து சற்று அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் தனது பங்கிற்கு அரை சதமடித்து 139 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்த போது 9 பவுண்டரி 1 சிக்சருடன் 57 (74) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன் வாயிலாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அடுத்தடுத்த போட்டிகளில் (229, 139) 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் இந்திய ஜோடி என்ற சாதனையையும் அவர் ரோகித் சர்மாவுடன் இணைந்து படைத்தார்.

இந்நிலையில் களமிறங்கிய கொடுத்த போதிலும் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். முதல் போட்டியை போலவே சதமடிப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 பவுண்டரி 2 சிக்ஸருடன் 80 (143) ரன்கள் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார்.

அந்த வகையில் இந்த போட்டியில் எடுத்த 80 ரன்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 2000 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

  1. ரோகித் சர்மா : 2034*
  2. விராட் கோலி : 1942
  3. செட்டேஸ்வர் புஜாரா : 1769

சதுரங்க விளையாட்டு பற்றி யாரும் அறிந்திடாத சுவாரசியமான தகவல்கள்

அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்களை தொடக்க வீரராக எடுத்த அவர் அதை அதிவேகமாக எடுத்த 2வது இந்திய தொடக்க வீரர் என்ற பெருமையை பெற்றவர்.  டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் தலா 2000 ரன்கள் அடித்த முதல் ஆசிய தொடக்க வீரர் என்ற வரலாறும் படைத்தார்.

அதை விட டெஸ்ட் ஒருநாள் டி20 என அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டையும் சேர்த்து அதிக ரன்கள் அடித்த 5-வது இந்திய வீரர் என்ற எம்எஸ் தோனியின் சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

  1. சச்சின் டெண்டுல்கர் : 34357 (664 போட்டிகள்)
  2. விராட் கோலி : 25461 (500 போட்டிகள்)
  3. ராகுல் டிராவிட் : 24064 (504 போட்டிகள்)
  4. சௌரவ் கங்குலி : 18432 (421 போட்டிகள்)
  5. ரோஹித் சர்மா : 17298* (443 போட்டிகள்)
  6. எம்எஸ் தோனி : 17092 (535 போட்டிகள்)
  7. வீரேந்திர சேவாக் : 16892 (362 போட்டிகள்)

இதை தொடர்ந்து வந்த ரகானே 8 ரன்னில் அவுட்டானாலும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மிகச் சிறப்பாக செயல்பட்டு 87* ரன்களும் ரவீந்திர ஜடேஜா 36* ரன்களும் எடுத்ததால் முதல் நாள் முடிவில் இந்தியா 288/4 ரன்கள் எடுத்துள்ளது.

இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 Sports
Advertisement