Shot Put Throw Game Rules
நாம் அனைவரும் குழந்தை பருவத்தில் பள்ளி படிக்கும் காலத்தில் பிடித்த விளையாட்டுகளை விளையாடுவோம். அதுமட்டும் இல்லாமல் அத்தகைய விளையாட்டிற்கான விதிமுறைகள் என்ன என்பது பற்றியும் தெரிந்துக்கொள்ளலாமல் நிறைய நபர்கள் விளையாடிற்கு சேர்ந்தால் மட்டும் போதும் என்று நினைத்து விளையாடுவோம். விளையாட்டில் எப்படி நிறைய வகைகள் உள்ளதோ அதனை போலவே அதற்கான விதிமுறைகளும் நிறையவே இடம் பெற்றிருக்கிறது. அதேபோல் இத்தகைய விதிமுறைகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று வேறுபட்டு காணப்படுகிறது. ஆனால் உண்மையான விளையாட்டு வீரர்களை தவிர மற்றவர்கள் யாருக்கும் விதிமுறைகள் மற்றும் இதர அம்சங்கள் அனைத்தும் தெரியவில்லை. அதனால் இன்று குண்டு எறிதல் விளையாட்டிற்கான விதிமுறைகள் என்னென்ன என்பது பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
அக்டோபர் 08-ம் தேதி இந்தியா ODI உலகக் கோப்பை தொடங்குகிறது..இதற்கான அட்டவணை
குண்டு எறிதல் விதிமுறைகள்:
குண்டு எறிதல் விளையாட்டு என்பது ஒருவரின் செயல்திறன் அல்லது ஆற்றலை பொறுத்து அமையக்கூடிய விளையாட்டு ஆகும். அதேபோல் இந்த விளையாட்டில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளும் முக்கியம் அம்சம் உள்ளது. இதில் வெற்றி என்பது உங்களுடைய குண்டு வீச்சின் அளவினை பொறுத்து அமையும்.
- இந்த விளையாட்டினை விளையாட உள்ள நபர் யாராக இருந்தாலும் முதலில் இந்த விளையாட்டிற்கு என்று அமைக்கப்பட்டுள்ள 7 அடி வட்டத்தினுள் நிற்க வேண்டும்.
- குண்டு எறிதல் விளையாட்டில் உங்களுடைய விளையாட்டினை செயல்படுத்துவதற்கான நேரம் 60 வினாடிகள் மட்டுமே.
- அதேபோல் இந்த விளையாட்டினை விளையாடுவதற்கு முன்பாக உங்களுடைய கையில் கிளவுஸ் அணியக்கூடாது. இதற்கு மாறாக வேண்டுமானால் கையில் டேப் செய்து சுற்றி கொள்ளலாம்.
- இத்தகைய விளையாட்டிற்கு முக்கிய அம்சமாக இருப்பது நீங்கள் இரும்பினை கழுத்திற்கு கீழ் கொண்டு வரும்போது உங்களுடைய நோக்கம் மற்றும் அழுத்தம் ஆனது முழுவதும் இந்த இரும்பின் மீது தான் இருக்க வேண்டும். ஏனென்றால் இதன் மீது நீங்கள் செலுத்தும் அழுத்தத்தின் விளைவாக தான் குண்டு எரியும் அளவு அமையும்.
- மேலும் இந்த விளையாட்டினை விளையாடும் போது உங்களுடைய கால் ஆனது கோட்டிற்கு முன்பு அல்லது பின்பு வெளியே வரக்கூடாது. அதனால் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
- குண்டு எறிதல் விளையாட்டிற்கான சராசரியாக எறியும் பகுதியின் அளவு என்பது 34.92 டிகிரி ஆகும். அதேபோல் நீங்கள் எறியும் இரும்பு குண்டு ஆனது மற்றவர்கள் யார் மேலும் படாதவாறு இருக்க வேண்டும்.
- இதில் உங்களுடைய இரண்டு கைகளையும் உபயோகப்படுத்தக்கூடாது.
- மேலே சொல்லப்படும் விதிமுறைகளை சரியாக கடைபிடித்து சரியான முறையில் பயிற்சி செய்தால் போதும் வெற்றி கிட்டும்.
விதிமுறைகள்:
ஆட்ட தொடக்கம்:
- வீரர் ரிங்குக்குள் நுழைந்து பந்து தூக்கிக்கொண்டு தயாராக நிற்க வேண்டும்.
- கால்கள் ரிங்குக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.
தள்ளுதல் விதி:
- பந்தை ஒரு கையைப் பயன்படுத்தி மட்டும் தள்ளவேண்டும்.
- பந்து காது மற்றும் கன்னத்துக்கு அருகில் வைத்துதான் தள்ள வேண்டும்.
- பந்து எறியும் போது, உந்துதல் (Push) மட்டுமே அனுமதிக்கப்படும்.
- வீசுவது போல (Throw) எறியக்கூடாது.
வீசும் நேரம்:
- வீரர் ரிங்குக்குள் நுழைந்த பிறகு 60 விநாடிகளில் பந்து தள்ள வேண்டும்.
பிழைகள்:
வெளியே மிதித்தல்:
- பந்தை தள்ளியவுடன் பாதையில் இருந்து வெளியே தள்ளினால், அதுவொரு பிழையாக கருதப்படும்.
தப்பான தள்ளுதல்:
- பந்து தள்ளும்போது காது அருகிலிருந்து தள்ளப்படவில்லையெனில் அது தவறாக கருதப்படும்.
- தள்ளுவதற்குள் நேரம் முடிவடைந்தால் அன்ஹா வீச்சு செல்லாது.
வெற்றி நிபந்தனை:
- வீரர் மூன்று வாய்ப்புகளில் மிக நீளமாக தள்ளுதல் செய்து வெற்றி பெறுவார்.
- அதிக தூரம் சென்ற வீச்சு மட்டுமே கணக்கில் எடுக்கப்படும்.
- பந்து மதிப்பிட்டு பகுதியை கடந்தால் மட்டும் புள்ளி வழங்கப்படும்.
கூடைப்பந்து விளையாட்டு பற்றி யாருக்கும் தெரியாத பல சுவாரசியமான தகவல்கள்
இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 | Sports |