டி-20 உலக கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு புதிய விதி..! ICC எடுத்த திடீர் முடிவு!

Advertisement

T20 World Cup New rules for Semi Final and Final Tamil News

நண்பர்களுக்கு வணக்கம்.. நடப்பு T20 உலக கோப்பையில் நடைபெற உள்ள செமி பைனல் மற்றும் பைனல் போட்டிகளுக்கு ICC புதிய விதிகளை அறிவித்துள்ளது அது குறித்த தகவலை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

ஆஸ்திரேலியாவில் 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்று அனைவர்க்கும் தெரிந்திருக்கும். இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆக இந்த ஒவ்வொரு அணிகளும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம் அடைவார்கள்.

அரையிறுதி போட்டி எப்பொழுது?

ஆக இந்த அரையிறுதி போட்டி வருகின்ற நவம்பர் 09 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நடப்பு டி-20 உலக கோப்பையில் நடக்கவுள்ள அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு புதிய விதியை ஐசிசி அறிமுகம் செய்துள்ளது.

ICC-யின் புதிய விதிகள் என்ன தெரியுமா?

அது என்னவென்றால் பொதுவாக, மழை குறுக்கிட்ட டி20 ஆட்டம் முடிவு பெற, ஆட்டத்தின் இரண்டு இன்னிங்ஸிலும் குறைந்தபட்சம் 5 ஓவர்கள் வீசப்பட வேண்டும். ஆனால், புதிய ஐசிசி விதிகளின்படி, டி-20 உலக கோப்பையில் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டத்தில் ஒரு போட்டிக்கு இரண்டு இன்னிங்ஸிலும் குறைந்தபட்சம் 10 ஓவர்கள் வீசப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை, போட்டி நாளில் குறைந்தபட்சம் 10 ஓவர்கள் என்ற நிபந்தனையை அணி எதிர்கொள்ளவில்லை என்றால், போட்டியின் முடிவு எப்படி அறிவிக்கப்படும்? மற்றும் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு ஐசிசி என்ன மாற்றத்தை செய்துள்ளது? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

10 ஓவர்கள் என்ற நிபந்தனையை அணி எதிர்கொள்ளவில்லை என்றால் என்ன ஆகும்?

இப்போது, ​​எந்த அணியும் 10 ஓவர்களுக்கும் குறைவாக எதிர்கொள்ளும் முன் போட்டி நாள் கைவிட்டப்பட்டால், ஆட்டத்தின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு குறிப்பாக ஒதுக்கப்பட்ட ரிசர்வ் நாளில் அதே கட்டத்தில் போட்டி மீண்டும் தொடங்கப்படும்.

ரிசர்வ் நாளிலும் அணிகள் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 10 ஓவர்களை முடிக்க முடியாவிட்டால், புள்ளிகள் பட்டியலில் அதிக இடத்தைப் பிடித்த அணி டி-20 உலக கோப்பை போட்டியின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

இறுதிப் போட்டிக்கான ரிசர்வ் நாளிலும் அணிகள் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 10 ஓவர்களை முடிக்க முடியாவிட்டால், டி-20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

டி-20 உலக கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான அட்டவணை:

அரையிறுதி 1 சிட்னி, 9 நவம்பர் (1:30 PM IST)
அரையிறுதி 2 அடிலெய்டு, 10 நவம்பர் (1:30 PM IST)
இறுதிப் போட்டி மெல்போர்ன், 13 நவம்பர் (1:30 PM IST)

 

இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 Sports
Advertisement