டென்னிகாய்ட் (வளையப்பந்து) விளையாட்டில் உள்ள விதிகள் பற்றி தெரியுமா.?

Advertisement

Tennikoit Rules in Tamil | வளையப்பந்து அடிப்படை திறன்கள் | வளையப்பந்து விதிகள்

நம் அனைவருமே டென்னிகாய்ட் விளையாட்டை பற்றி கேள்வி பட்டிருப்போம். சில பேருக்கு இந்த விளையாட்டை ரிங்பால் என்று சொன்னால் நன்றாகவே புரியும். ஏனெற்றால் சிறு வயதில் நாம் ரிங்பால் விளையாடலாமா..? என்று தான் கேட்போம்.  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டென்னிகாய்ட் விளையாட்டை விரும்பி விளையாடுவார்கள். ஆனால் பலபேருக்கு இவ்விளையாட்டில் உள்ள விதிகள் பற்றி அதிகமாக தெரியாது. எனவே அதனை தெரிந்து கொள்ளும் வகையில் இப்பதிவில்  டென்னிகாய்ட்விளையாட்டின் விதிகள் மற்றும் அதன் சில விவரங்களை பதிவிட்டுள்ளோம்.

Tennikoit Game Rules and Regulations in Tamil:

Tennikoit Game Rules and Regulations in Tamil

டென்னிகாய்ட் என்பது டென்னிஸ் போன்ற ஒரு விளையாட்டு ஆகும். டென்னிஸ் விளையாடுவதற்கு ஏற்ற ஆடுகளம் போல் டென்னிகாய்ட் தேவை. இந்த விளையாட்டை விளையாடுவதற்கு வட்ட வடிவத்தில் உள்ள இரப்பர் பந்து தேவை. இந்த விளையாட்டில் இரு விளையாட்டு வீரர்களையும் பிரிக்கும் வகையில் நாவில் ஒரு வலை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும்.

டென்னிகாய்ட் விளையாட்டு முக்கியமாக ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளது.

டென்னிகாய்ட்டில் ஒருவர் ஒருவர் 21 புள்ளிகளைப் பெறும் 3 செட் கேம்களை விளையாட வேண்டும்.

ஒரு வீரர் ஒரு கேட்சை தவறவிட்டால், அவரது எதிரி ஒரு புள்ளியை வெல்வார் மற்றும் 21 புள்ளிகளைப் பெற்ற முதல் வீரர் செட்டை வெல்வார்.

இரண்டு செட்களை வென்ற முதல் வீரர் போட்டியில் வெற்றி பெறுவார். இருப்பினும், தொகுப்புகள் பொதுவாக ஒவ்வொன்றும் 30 நிமிடங்களாக மட்டுமே இருக்கும்.

அதாவது, ஒரு வீரரால் 1/2 மணி நேரத்திற்குள் 21 புள்ளிகளை எடுக்க முடியவில்லை என்றால் செட்டின் வெற்றியாளர் அதிக புள்ளிகளைப் பெற்ற வீரர் ஆவார்.

புட்பால் விளையாட்டை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.!

முக்கிய விதிமுறைகள்:

  • டென்னிகாய்ட் வீரர்கள் ரிங்பாலை ஒரு கையால் மட்டுமே பிடிக்கவும் வீசவும் வேண்டும்.
  • கேட்ச் மற்றும் த்ரோ இடையே மாற்றம் சீராக இருக்க வேண்டும்.
  • ரிங்கை நேராக கிழ்நோக்கி வீசக்கூடாது. அது மேலே செல்லும்படி வீசவேண்டும்.
  • புள்ளியை வென்ற வீரர் கோர்ட்டின் பேஸ்லைனில் இருந்து அடுத்த சேவையை பெறுகிறார்.
  • எந்த காரணத்திற்காகவும் வீரர்கள் அல்லது ரிங் வலையை தொட முடியாது.

டென்னிகாய்ட் வீரர்கள்:

டென்னிகாய்ட்டில்  குறைந்தபட்சம் இரண்டு பேர் அல்லது அதிகபட்சம் நான்கு பேர் வரை விளையாடலாம். ரப்பரால் செய்யப்பட்ட வட்ட வளையத்திற்கு “டென்னிகாய்ட்” என்று பெயர்.

டென்னிகாய்ட் வரலாறு:

டென்னிகாய்ட், 1930 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள உயர்நிலைப் பள்ளி பெண்களால் விளையாடப்பட்டது. ஆனால் டென்னிகாய்ட் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தான் பிரபலமடைந்தது. தற்போது, தென்னிந்தியாவில் இந்த விளையாட்டு மிகவும் பிரபலமடைந்து வருகிறது.

பேட்மிண்டன் விளையாட்டில் உள்ள விதிகள் பற்றி தெரியுமா.?

இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 Sports

 

Advertisement