Throw Ball Rules in Tamil
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவானது சற்று சுவாரசியம் மிக்க ஒன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. அதாவது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் பிடித்த ஒன்று தான் விளையாட்டு. அப்படி பார்த்தால் விளையாட்டினை விளையாடுவர்களை விட விளையாட வேண்டும் என்ற ஆசை இருந்தும் அதற்கான விதிமுறைகள் தெரியாத காரணத்தினால் விளையாடாமல் இருப்பர்வகளின் எண்ணிக்கையே இன்றளவும் அதிகமாக இருக்கிறது. அதனால் எந்த விளையாட்டினை நாம் விளையட வேண்டும் நினைத்தாலும் கூட முதலில் அதற்கான விதிமுறைகளை சரியான முறையில் கண்டுகொண்டாலே பாதி வெற்றியாளயராக மாறிவிடலாம். அதனால் இன்று விளையாட்டு பிரிவுகளில் ஒன்றான த்ரோபால் விளையாட்டிற்கான விதிமுறைகள் பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
பேட்மிண்டன் விளையாட்டில் உள்ள விதிகள் பற்றி தெரியுமா
த்ரோபால் விளையாட்டு விதிமுறைகள்:
த்ரோபால் விளையாட்டு ஆனது இரண்டு அணிகளை கொண்டாக விளையாட்டாக இருக்கிறது. அதனால் ஒவ்வொரு அணியிலும் மொத்தம் 12 நபர்கள் இருக்க வேண்டும்.
அந்த 12 நபர்களில் 7 நபர் ஆடும் மைதானத்தின் உள்ளேயும், 5 நபர்கள் அவர்களை மாற்றி விடுவதற்காக வெளியேயையும் இருக்க வேண்டும்.
இந்த விளையாட்டிற்கான மைதானம் என்பது 12.20 x 18.30 மீட்டர் என்ற அமைப்பில் இருக்கும். மேலும் 3 அடி 3.37 அங்குலம் மையத்தின் இருபுறமும், 7.22 அடி வளையத்தில் உயரமும் காணப்படுகிறது.
இத்தகைய விளையாட்டினை பொறுத்தவரை ரேலி ஸ்கோரை செய்யும் போது மட்டுமே மதிப்பெண் புள்ளிகள் அளிக்கப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் 3 செட்டுகளிலும் ஆட்ட வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும். ஒரு அணி பந்தைப் பிடிக்கத் தவறிய வலையைத் தாக்கித் திரும்ப எறிவது போன்றவற்றை வீசினாலோ அல்லது ஒரு சர்வைத் திரும்பப் பெறத் தவறினாலோ அத்தகைய அணிக்கான மதிப்பெண் புள்ளியானது இழக்கப்படும்.
த்ரோபால் விளையாட்டில் நீங்கள் எந்த பந்தினை வீசினாலும் கூட அது தோள்பட்டை கோட்டிற்கு மேல் அல்லது மேலே இருந்து மட்டுமே வீச வேண்டும்.
இந்த விளையாட்டில் ஒரே நேரத்தில் இரண்டு வீரர்கள் பந்தினை பிடிக்க கூடாது. இதுவே த்ரோபால் விளையாட்டின் விதிமுறைகள் ஆகும்.
புட்பால் விளையாட்டை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 | Sports |