கடைசி பந்தில் வெற்றி பெற்ற மதுரை அணி..! அடுத்து யாருடன் மோதப்போகிறது முழு விவரம் இதோ..!

Advertisement

TNPL 2023 Tirupur Team Vs Madurai Match 

நாம் என்ன தான் தினம் ஒரு விளையாட்டினை விளையாடி வந்தாலும் கூட அது கிரிக்கெட்டிற்கு ஈடாகவே முடியாது என்பது தான் பலரது கருத்துக்களாக உள்ளது. அந்த வகையில் கிரிக்கெட் விளையாட்டு நடைபெறப் போகிறது என்றால் அதனுடைய இறுதி விளையாட்டு வரை கண்டுகளிக்கும் நபர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். அதிலும் ஒரு சிலர் இந்த ஆட்டத்தின் அடுத்த அடுத்த நிமிடம் என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வத்துடனே இருப்பார்கள். இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் பட்சத்தில் நேற்றைய தினம் நடந்த TNPL 2023 மேட்சில் மதுரை அணி வெற்றியினை குவித்துள்ளது. ஆகவே அதனை பற்றிய முழு தகவலை பார்க்கலாம் வாங்க..!

SMP vs ITT:

SMP vs ITT

ஜூலை மாதம் 4-ஆம் தேதி அன்று திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் சீசெம் மதுரை பாந்தர்ஸ் vs ஐட்ரீம் திருப்பூர் தமிழர்ஸ் என்ற இரண்டு அணிகள் போட்டியிட்டன.

இத்தகைய போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீசுவதாக கூறியுள்ளது. அதனால் முதல் ஆட்டத்தில் காலம் இறங்கிய மதுரை அணி ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் ஆரம்பத்தில் விளையாடிய போது 9 ஓவரில் 68 ரன்களை நல்ல ஆட்டத்தினை ஆடிய கேப்டன் ஹரி நிஷாந்த் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 34 (27) ரன்கள் எடுத்து ஆட்டத்தை விட்டு வெளியேறினார்.

இதனை தொடர்ச்சி ஆடிய மதுரை அணி தொடக்கத்தில் விளையாடிய அதே நிலையில் விளையாட தொடங்கியது. இறுதியில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் ஓவர்களில் எடுத்து ஆட்டத்தை இழந்தது மதுரை அணி. இதற்கு அடுத்த படியாக பேட்டிங் செய்யும் திருப்பூர் அணிக்கு 161 ரன்கள் என்ற இலக்கினை வைத்தது மதுரை அணி.

ஆனால் திருப்பூர் அணி நல்ல நிலையில் விளையாடினாலும் கூட இறுதியில் ஆட்டத்தில் 161 ரன்கள் எடுக்காததால் தோல்வியை தவுழுவியது திருப்பூர் அணி. ஆகவே 4 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை அணி வெற்றி பெற்றது.

இத்தகைய வெற்றியின் தொடர்ச்சியாக பிளே ஆப் சுற்றில் குவாலிபயர் 1 போட்டியில் முதல் 2 இடங்கள் பிடித்த கோவை – திண்டுக்கல் அணிகளும், எலிமினேட்டர் போட்டியில் நெல்லை – மதுரை அணிகளும் விளையாடுவதற்கு தகுதி பெற்றது.

முதன்முறையாக வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 5 இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா

இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 Sports
Advertisement