Virat Kohli Breaks Jacques Kallis Record on his 500th Match
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. இதன் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2 வது போட்டி ஜூலை 20 ஆம் தேதி துவங்கி இருக்கிறது. அப்போட்டியில் விராட் கோலியின் சாதனை பற்றித்தான் இப்பதிவில் பின்வருமாறு பார்க்கப்போகிறோம்.
விராட் கோலியின் சாதனை:
சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 80 ரன்களில் ஆட்டமிழந்தார்.அதைத் தொடர்ந்து வந்த ரகானே 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மறுபுறம் களமிறங்கியிருந்த விராட் கோலி தனது தரத்திற்கு நிகரான கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இதில் அவர் சிறப்பாக விளையாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.
அவருடன் விளையாடிய ரவீந்திர ஜடேஜா தனது பங்கிற்கு நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தி 5வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 36* ரன்கள் எடுத்த போது நிறைவுக்கு வந்த முதல் நாள் முடிவில் 288/4 ரன்களை எடுத்துள்ள இந்தியாவுக்கு களத்தில் விராட் கோலி 87* ரன்களுடன் விளையாடி வருகிறார்.
மேலும் கடந்த 15 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் 25000க்கும் மேற்பட்ட ரன்களை 50க்கும் மேற்பட்ட சராசரியில் குவித்துள்ள அவர் உலகிலேயே 500 போட்டிகளின் முடிவில் 50க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியை கொண்ட ஒரே வீரர் மற்றும் அதிக ரன்கள் குவித்த வீரர் ஆகிய இரட்டை உலக சாதனைகளை படைத்தார்.
அக்டோபர் 08-ம் தேதி இந்தியா ODI உலகக் கோப்பை தொடங்குகிறது..இதற்கான அட்டவணை
இந்நிலையில் இந்த போட்டியில் அட்டகாசமான கவர் டிரைவ் விளாசி பவுண்டரியை அடித்து 50 ரன்களை கடந்த அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 500 வதுபோட்டியில் அரை சதமடித்த முதல் வீரர் என்ற மற்றுமொரு மாபெரும் உலக சாதனையை படைத்துள்ளார்.
போட்டியில் அரை சதமடித்த முதல் வீரர் என்ற மற்றுமொரு மாபெரும் உலக சாதனையை படைத்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 5வது வீரர் என்ற தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஜேக் காலிஸ் சாதனையும் தகர்த்துள்ளார் புதிய வரலாறு படைத்துள்ளார்.
1. சச்சின் டெண்டுல்கர் : 34357
2. குமார் சங்கக்காரா : 28016
3. ரிக்கி பாண்டிங் : 27483
4. மகிளா ஜெயவர்த்தனே : 25957
5. விராட் கோலி : 25548*
6. ஜாக் காலிஸ் : 25534
7. ராகுல் டிராவிட் : 24208
அது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 வது இடத்தில் அதிக ரன்கள் குவித்த 5வது வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார்.
- சச்சின் டெண்டுல்கர் : 13492
- மகிளா ஜெயவர்த்தனே : 9509
- ஜாக் காலிஸ் : 9033
- பிரைன் லாரா : 7535
- விராட் கோலி : 7097*
தோனியின் All Time சாதனையை முறியடித்த ரோகித் சர்மா..! வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அட்டகாசம்..
இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 | Sports |