டெஸ்ட் தொடரை வென்றும் கூட சரிவை சந்தித்துள்ள இந்திய அணி..!

Advertisement

WTC Points Table India Position in Tamil

பொதுவாக சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்குமே விளையாட்டு என்றால் மிக மிக பிடிக்கும். ஒருசிலருக்கு விளையாட்டு அல்லது கேம் என்ற வார்த்தையை கேட்டலே மனதிற்குள் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி உற்ச்சாகம் தோன்றும். ஒரு சிலருக்கு விளையாடுவது என்பது பிடிக்கும். ஆனால் ஒருசிலருக்கு விளையாட்டை கண்டு ரசிப்பது என்பது பிடிக்கும். அப்படி நமது நாட்டில் பலவிதமான விளையாட்டுகள் விளையாடப்பட்டாலும் நாம் அனைவருக்குமே மிக மிக பிடித்த அல்லது நம்மால் மிக மிக ரசிக்கப்படும் ஒரு விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். அப்படி நம்மில் பலருக்கும் பிடித்த கிரிக்கெட் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதில் நமக்கு மிகுந்த ஆர்வம் இருக்கும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக விளையாட்டுகள் பற்றிய அனைத்து தகவல்களையும் பதிவிட்டு வருகின்றோம். அதேபோல் தான் இன்றும் கிரிக்கெட் விளையாட்டு பற்றிய ஒரு தகவலை தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து அது என்ன தகவல் என்று அறிந்து கொண்டு மகிழுங்கள்.

தோனியின் All Time சாதனையை முறியடித்த ரோகித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அட்டகாசம்

WTC Points Table after Ind vs Wi Test Series in Tamil:

WTC Points Table after Ind vs Wi Test Series in Tamil

2023-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரில் இருந்து துவங்கியது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றி வென்றுள்ளது.

இந்திய அணிக்கு இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடராக அமைந்திருந்தது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்திய அணி.

அந்த தொடரில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இவ்வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி டிராவில் முடிவடைந்தது. அதாவது இந்த இரண்டாவது போட்டியின் கடைசி நாளான நேற்றைய ஐந்தாம் நாள் ஆட்டமானது முழுவதுமாக மழையால் பாதிக்கப்பட்டதால் ஒரு பந்துகூட வீசப்படாமல் போட்டி டிராவில் முடிவடைந்தது.

இதன் காரணமாக இந்திய அணி இந்த தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

உலகக்கோப்பை விளையாட போகும் 10 அணிகளுக்கும் கெடு விதித்த ICC

WTC Points Table after India Win in Tamil:

WTC Points Table after India Win in Tamil

என்னதான் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றி இருந்தாலும், தற்போது வெளியாகியுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஏனென்றால் பாகிஸ்தான் அணி இதுவரை விளையாடியுள்ள ஒரு ஆட்டத்தில் ஒரு வெற்றி பெற்றுள்ளதால் அந்த அணி 100% புள்ளிகளை பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

அதனை அடுத்து இந்திய அணி தாங்கள் விளையாடியுள்ள இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் ஒரு டிரா என 66.67% புள்ளிகளை பெற்று பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதே பட்டியலில் ஆஸ்திரேலியா 54.17 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், இங்கிலாந்து 29.17 சதவீதத்துடன் நான்காவது இடத்திலும் உள்ளது. வெஸ்ட் இண்டிஸ் அணி 16.67 சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திலும், இலங்கை அணி ஆறாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து விளையாட இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று ஆகும்.

சதுரங்க விளையாட்டு பற்றி யாரும் அறிந்திடாத சுவாரசியமான தகவல்கள்

இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 Sports
Advertisement