வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இரைப்பையில் புண் இருந்தால் இப்படியெல்லாம் அறிகுறிகள் இருக்குமா..?

Updated On: March 28, 2024 7:03 PM
Follow Us:
Gastric Ulcer Symptoms in Tamil
---Advertisement---
Advertisement

Gastritis Ulcer Symptoms in Tamil

பொதுநலம் பதிவின் அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்..! பொதுவாக நாம் வாழும் இந்த காலகட்டம் எப்படி மாறி இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். எங்கு பார்த்தாலும் வாகன புகைகளும், தொழிற்சாலை கழிவுகளும், சுற்றுசூழல் மாசும் தான் இருக்கிறது. இதனால் நாம் வாழும் இவ்வுலகில் எத்தனையோ நோய்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அந்த காலத்தில் அப்படி இல்லை. அந்த காலத்தில் வாழ்ந்த ஒரு நோய்க்கு பல மருந்துகளை கண்டுபிடித்தார்கள். அதுமட்டுமில்லாமல், உணவையே மருந்தாக உண்டு வாழ்ந்து வந்தார்கள்.

ஆனால் நாம் தற்போது வாழ்ந்து வரும் காலகட்டத்தில் புதிது புதிதாக நோய்களை தான் கண்டறிந்து வருகின்றோம். மேலும் நாம் மருந்தை தான் உணவாகவே உட்கொள்கின்றோம். இதை தான் உணவே மருந்து என்ற காலம் மாறி மருந்தே உணவு என்ற நிலையில் இருக்கின்றோம் என்று சொல்கிறார்கள். இப்படி ஒரு சூழலில் நமக்கு ஏதாவது சிறிய அறிகுறிகள் வந்தால் கூட பயமாக தான் இருக்கும். அதனால் தான் நம் பதிவின் வாயிலாக ஒவ்வொரு நோய்க்கான அறிகுறிகளை அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் இரைப்பையில் புண் இருந்தால் என்ன அறிகுறிகள் உண்டாகும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

அல்சர் குணமாக சித்த வைத்தியம்

இரைப்பை புண் என்றால் என்ன..? 

பொதுவாக அல்சர் என்றால் என்னவென்று நம் அனைவருக்குமே தெரியும். நம் வயிற்றில் புண் உருவாவதை தான் அல்சர் என்று கூறுகின்றோம். அதுபோல ஒருவருக்கு அல்சர் இருப்பதை அவருக்கு ஏற்படும் சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். மேலும் ஒருவருக்கு அல்சர் இருந்தால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்று தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

அல்சர் நோயின் அறிகுறிகள்

கேஸ்ட்ரிக் அல்சர் என்பது இரைப்பை புண் அல்லது வயிற்று புண் என்று சொல்லப்படுகிறது. அதாவது இந்த இரைப்பை புண்ணானது சிறுகுடலின் முதல் பகுதியில் உருவாகிறது. இது  வயிற்றின் புறணியை உடைக்கிறது. மேலும் இது கீழ் உணவுக்குழாயில் ஏற்படுகிறது.  வயிற்றில் இந்த புண் வளர்ச்சியின் காரணமாக இது இரைப்பை புண் என்று அழைக்கப்படுகிறது.

எபிகாஸ்ட்ரிக் வலி என்பது மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். பொதுவாக நாம் சாப்பிட்ட பிறகு எரியும் உணர்வும் இரைப்பை புண் இருப்பதற்கான ஒரு அறிகுறியாகும். மேலும் இரைப்பையில் புண் இருப்பதை சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். அந்த அறிகுறிகள் என்னவென்று இப்போது காண்போம்.

இரைப்பை புண் அறிகுறிகள்: 

  • சாப்பிட்ட பிறகு எரியும் உணர்வுகளுடன் வலி
  • வயிற்று வலி
  • வயிற்றில் எரிச்சல்
  • வீக்கம்
  • ஏப்பம்
  • கொழுப்பு உணவுக்கு சகிப்புத்தன்மை
  • நெஞ்செரிச்சல்
  • மார்பு அசௌகரியம்
  • புண் காரணமாக இரத்தப்போக்கு
  • நிலையான இரத்த சோகை காரணமாக சோர்வு மற்றும் மூச்சுத் திணறல்
  • வீக்கம்
  • குமட்டல்
  • வாந்தி
  • பசியிழப்பு
  • அஜீரணம்
  • சோர்வு

மேலும் இதுபோன்ற அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

வயிற்று புண் இருப்பவர்கள் இதை சாப்பிடுங்கள்.. வயிற்று புண் விரைவில் குணமாகும்..

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now