கணையத்தில் வீக்கம் இருந்தால் இந்த அறிகுறிகள் எல்லாம் தோன்றும்..!

Advertisement

Pancreas Inflamed Symptoms in Tamil

கணையம் என்பது வயிற்று பகுதியில் இரைப்பைக்கு கீழே அமைந்திருக்கும் ஒரு உறுப்பு ஆகும். இது, கேரட் அல்லது முள்ளங்கி போன்ற வடிவத்தில் இருக்கும்.  கணையத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். அவற்றில் முக்கியமானது, கணையம் அழற்சி/ வீக்கம் ஆகும். கணையத்தில் வீக்கம் வந்தால் உடலில் பல்வேறு அறிகுறிகள் தோன்றும். எனவே, அறிகுறிகள் தோன்றியதும் அவற்றிக்கான சிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலம், கணைய அழற்சியை குணப்படுத்தலாம். ஆகவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் கணையத்தில் வீக்கம் ஏற்பட்டால் என்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கணையம் வீக்கம் என்றால் என்ன.?

கணையம் வீக்கம் என்றால் என்ன

கணையத்தில் ஒரு பகுதி வீக்கமடைந்து நோய் தோற்று ஏற்படும். கணையத்தில் ஏற்படும் நோயியல் அழற்சியின் காரணமாக ஏற்படுகிறது. இது, சிறுநீரகம், கல்லீரல், செரிமான அமைப்பு மற்றும் கணையம் ஆகியவற்றிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. கணைய அழற்சியில் இரண்டு இரண்டு வகைகள் உள்ளது. ஒன்று கடுமையான  அழற்சி மற்றொன்று நாள்பட்ட கணைய அழற்சி ஆகும்.

இந்த அறிகுறிகள் இருக்கா..அப்போ இது குடல்வால் பிரச்சனையாக தான் இருக்கும்..

கணையம் வீக்கம் அறிகுறிகள்:

  • அஜீரணம்.
  • வாந்தி அல்லது குமட்டல்.
  • வயிற்று வலி அல்லது மென்மை.
  • எடை இழப்பு.
  • விக்கல்.
  • காய்ச்சல்.
  •  வயிற்றில் வீக்கம்.
  • கல்லீரல் பிரச்சனைகள்.
  • ஊட்டச்சத்து குறைபாடுகள்.
  • உணவை ஜீரணிக்க இயலாமை.
  • இன்சுலின் உற்பத்தி செய்ய இயலாமை.
  • நீரிழிவு நோய்.
  • இரத்த சோகை அல்லது குறைந்த இரத்த எண்ணிக்கை.

கணைய அழற்சி ஏற்பட காரணங்கள்:

கணையம் அழற்சி பெரும்பாலும் அதிக மது அருந்துவதாலும், பித்தப்பையில் கற்கள் இருப்பதாலும் உருவாகிறது. அதுமட்டுமில்லாமல், சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் போன்ற மரபணு நோய்களும் கணைய அழற்சி ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது., மேலும் போதிய அளவிலான ஊட்டசத்து கிடைக்காமல் இருப்பதும் ஒரு காரணம் ஆகும்.

கண்புரை அறிகுறிகள் மற்றும் கண்புரை எதனால் வருகிறது? விளக்கம் இதோ..

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement