கண்புரை அறிகுறிகள் மற்றும் கண்புரை எதனால் வருகிறது? விளக்கம் இதோ..

Advertisement

கண்புரை எதனால் வருகிறது? – Cataract symptoms in tamil

பொதுவாக மனிதர்களுக்கு 40 வயது ஆகிவிட்டது என்றாலே போதும் இப்போது பலவகையான ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் வந்துவிடுகிறது. மனிதர்களுடைய கண்களும் இதற்கு விதி விலக்கல்ல. அப்படி வரக்கூடிய பிரச்சனை தான் கண்புரை.. இந்த கண்புரை நோயின் அறிகுறிகள் மற்றும் இந்த கண்புரை எதனால் வருகிறது என்பது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

கண்புரை என்றால் என்ன?

இந்த கண்புரை என்பது பொதுவாக 40 அல்லது 50 வயது ஆகிவிட்டது என்றாலே பெரும்பாலானவர்களுக்கு வரக்கூடிய ஒரு நோய் தான்.

நாம் செய்யக்கூடிய நல்ல காரியங்களோ, கெட்ட காரியங்களோ, நாம் சாப்பிடாத வைட்டமின்களோ, நாம் சாப்பிடாத பழம் வகைகளோ இதன் காரணங்களினால் எல்லாம் இந்த கண்புரை நோய் வருவதில்லை. இது வயது தொடர்புடைய ஒரு நோய் என்றும் சொல்லலாம். நமக்கு தலை நரைப்பது போல் இதுவும் ஒரு சம்பவம். இதற்கு என்ன ட்ரீட்மெண்ட் என்றால் அறுவை சிகிச்சை ஓன்று மட்டும் தான் இதற்கு ட்ரீட்மெண்ட் ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த அறிகுறிகள் இருந்தா அது ஜிகா வைரஸ் தான்..! வாங்க தெரிஞ்சிப்போம்..!

கண்புரை அறிகுறிகள் – Cataract symptoms in tamil:

கண்புரை

  1. இரவில் வாகனம் ஓட்டும் போது எதிர்புறம் வரும் வண்டியை சரியாக பார்க்க முடியாது.
  2. பார்வை கொஞ்சம் மங்கலாக தெரியும். அதாவது புகைமண்டலம் போல் இருக்கும்.
  3. தூரத்தில் இருப்பதை நம் கண்களால் பார்க்க முடியாது கண்களை மறைக்கும்.
  4. நம்மால் சரியாக நடக்கக்கூட முடியாது, பக்கத்தில் இருக்கும் அறைக்கு கூட செல்ல முடியாது.
  5. சுத்தமாக எதுவும் சரியாக தெரியாது ஒரு வெளிச்சம் மட்டும் தான் தெரியும், கைகளை ஆடுவது மட்டும் தான் தெரியும்.
  6. குறிப்பாக இரவில் ஹெட்லைட்களைப் பார்க்கும்போது விளக்குகளைச் சுற்றி ஒளிவட்டம் பார்ப்பது.
  7. மங்கலான பார்வை.
  8. பாதிக்கப்பட்ட கண்ணில் சில சந்தர்ப்பங்களில் இரட்டை பார்வை.

கண்புரை எதனால் வருகிறது?

  1. கண்புரைக்கு முக்கிய காரணம் வயது. இது தவிர, பல்வேறு காரணிகள் கண்புரை உருவாவதற்கு காரணமாக இருக்கலாம்:
  2. கண்களில் ஏதாவது காயம் ஏற்பட்டு அதனை கவனிக்காமல் விட்டுவிடுவது.
  3. உயர் இரத்த அழுத்தம்.
  4. புற ஊதா கதிர்வீச்சு.
  5. சூரிய ஒளியின் நீண்ட வெளிப்பாடு.
  6. சில மருந்துகளின் அதிகப்படியான பயன்பாடு.
  7. ஹார்மோன் மாற்று சிகிச்சை.

இது போன்ற காரணங்களினாலும் கண்புரை நோய் ஏற்படலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தக்காளி காய்ச்சல் அறிகுறி

பல்வேறு வகையான கண்புரை:

  • கார்டிகல் கண்புரை
  • உள்நோக்கிய கண்புரை
  • அணு கண்புரை
  • பின்புற சப்கேப்சுலர் கண்புரை
  • ரொசெட் கண்புரை
  • அதிர்ச்சிகரமான கண்புரை

ஆபத்து காரணிகள்:

இந்த காரணிகள் கண்புரை உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கலாம்

  • புகைபிடித்தல்
  • உடல் பருமன்
  • வயோதிகம்
  • நீரிழிவு நோய்
  • உயர் இரத்த அழுத்தம்
  • ஸ்டீராய்டு மருந்து
  • குடும்ப வரலாறு
  • அதிர்ச்சி

கண் புரையை எவ்வாறு தடுப்பது:

சரியான கவனிப்பு இருந்தால் கண்புரை வராமல் தடுக்கலாம். அவற்றில் சில..

  • வழக்கமான கண் பரிசோதனைகள்
  • புகைபிடிப்பதை நிறுத்துதல்
  • ஆரோக்கியமான உணவைப் பராமரித்தல் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது.
  • சூரிய ஒளியில் வெளியே செல்லும் போது UV பிளாக்கிங் சன்கிளாஸ்களை அணிவது
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement