கோமாரி நோய் அறிகுறிகள் | Komari Disease in Cow Tamil..!
மனிதர்களுக்கு பெரும்பாலும் சிறிய காய்ச்சல் முதல் பெரிய பிரச்சனைகள் என எதுவாக இருந்தாலும் அதற்கான அறிகுறிகள் உடனே தோன்றும். சில நேரத்தில் நமது உடலில் தோன்றும் அறிகுறிகளை வைத்தே நமக்கு என்ன பிரச்சனை என்பதை கணித்த மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவோம். ஆனால் மற்ற சில நேரத்தில் இதற்கு மாறாக நமக்கு என்ன பிரச்சனை என்பதை நம்மால் கண்டிறியவே முடியாது. அந்த வகையில் மனிதர்களாகிய நமக்கே இத்தகைய ஏற்படும் போது விலங்குகளுக்கு சொல்லவே வேண்டியது இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்பது சொல்லவும் முடியாது. மனிதர்களாகிய நாம் கண்டறிந்தால் மட்டுமே அது சரி செய்ய முடியும். ஆகவே இன்று கோமாரி நோய்க்கான அறிகுறிகள் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க..!
கோமாரி நோய் என்றால் என்ன..?
கோமாரி நோய் என்பது விலங்குகளுக்கு குறிப்பாக மாடுகளுக்கு ஏற்படக்கூடிய ஒரு வைரஸ் தோற்று நோயாகும். அந்த வகையில் இத்தகைய நோயானது பிகொர்ணா என்று சொல்லப்படும் நச்சுயிர்க்களாலே பரவுகிறது. இது மாடுகள் மட்டுமின்றி ஆடு, பன்றி என மற்ற உயிரினங்களையும் பாதிக்கிறது.
கோமாரி நோய் அறிகுறிகள்:
- மாட்டின் வாயில் இருந்து சளி போன்று கெட்டியான உமிழ் நீர் சுரத்தல்.
- தீவனம், புண்ணாக்கு மற்றும் தண்ணீர் குடித்தல் என இவற்றை எல்லாம் தவிர்த்தல்.
- மாட்டு மடியில் வீக்கம்.
- மாட்டு வாயில் கொப்பளங்கள் மற்றும் காய்ச்சல்.
- கால்களுக்கு இடையே உள்ள கொழும்புகளில் கொப்பளங்கள் வருதல்.
- உடம்பு மற்றும் கால் பகுதிகளில் புண் ஏற்பட்டு நீண்ட நாட்கள் வரை ஆறாமல் இருத்தல்.
- மாடுகளுக்கு மூச்சி இறைப்பு மற்றும் கரு கலைந்து போதல்.
- மாட்டிடம் பால் குடித்த காரணத்தினால் கன்று குட்டி இறந்து போதல்.
- ரோமங்களில் மாற்றம்.
மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்து அறிகுறிகளும் மாடுகளுக்கு கோமாரி நோய் வருவதற்கான அறிகுறிகளாக இருக்கிறது.
கோமாரி நோய் குணமாக:
வைத்தியம்- 1
- குப்பை மேனி
- துளசி
- மருதாணி
- வேப்பிலை
- மஞ்சள் தூள்- 10 கிராம்
- நல்லெண்ணெய்- 1 லிட்டர்
முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள இலைகளில் எல்லாம் 50 கிராம் அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு இவற்றை எல்லாம் நன்றாக காய வைத்து பொடியாக செய்து கொள்ளுங்கள்.
இப்போது 1 லிட்டர் நல்லெண்ணெய்யில் செய்து வைத்துள்ள பொடி மற்றும் மஞ்சள் தூளினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின்பு மாடுகளின் கால்களில் உள்ள புண்களில் இதை போட்டாலே போதும் புண் விரைவில் குணமாகிவிடும்.
வைத்தியம்- 2
- கருப்பட்டி வெல்லம்- 100 கிராம்
- சீரகம்
- மிளகு
- வெந்தயம்
- பூண்டு
- மஞ்சள்தூள்
இப்போது மிளகு, வெந்தயம், சீரகம் என இவற்றை எல்லாம் நன்றாக தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். பின்பு இவற்றுடன் ஊற வைத்துள்ள பூண்டு மற்றும் மஞ்சளையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைக்கவும்.
அதன் பிறகு அரைத்த பேஸ்டை கருப்பட்டி வெல்லத்துடன் சேர்த்து மாட்டிற்கு உள் உணவாக கொடுக்க வேண்டும். இத்தகைய முறையில் காலை, மாலை என இரண்டு வேலை கொடுத்தால் போதும் வாயில் உள்ள புண் குணமாகிவிடும்.
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |