பாம்பு கடித்தால் இதுபோன்ற அறிகுறிகள் இருக்கும்..! Pambu Kadi Arikurigal
இன்றைய கால கட்டத்தில் மருத்துவர்களை தவிர அவ்வளவு பெரிதாக மற்ற யாருக்கும் பாம்பு கடித்தவர்களுக்கு என்ன முதல் உதவி கொடுக்க வேண்டும் என்று தெரிவதில்லை. அதேபோல் பாம்பு கடித்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் இருக்கும், அதற்கு என்ன சிகிச்சை, சிகிச்சையை மேற்கொண்டாலும் அதன் பிறகு நாம் செய்ய கூடாத விஷயம் என்ன இது போன்ற எந்த ஒரு விஷயமும் யாருக்கும் அவ்வளவு பெரிதாக தெரிவதில்லை. முந்தைய காலத்தில் நமது முன்னோர்கள் தான் பலவகையான பூச்சி கடி மற்றும் பாம்பு கடைகளுக்கு சிகிச்சை செய்துள்ளனர். அவர்களை பின்பற்றி வந்திருந்தோம் என்றாலே நாமமே நமக்கு ஏற்படும் சில வகையான பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடிந்திருக்கும். இனியாவது விழிப்புணர்வுடன் இருப்போம். சரி இன்றைய பதிவில் பாம்பு கடித்தால் இதுபோன்ற அறிகுறிகள் இருக்கும் என்று இப்பொழுது நாம் பதிவை படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
நல்ல பாம்பு கடித்ததால் அறிகுறிகள்:
நல்ல பாம்பு கடித்தால் அந்த இடத்தில் வலி இருக்கும். இருப்பினும் சிலருக்கு வலி தெரியாது. கண் பார்வை திறன் மங்கும், கண் இமைகள் சுருக்கும், நாக்கு தடிக்கும், பேச்சு குளறும், மூச்சு திணறல் ஏற்படும், வாயில் எச்சில் வடியும், நினைவு ஆற்றல் குறையும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் என்னன்னு தெரிஞ்சுக்கோங்க..
கட்டுவிரியன் பாம்பு கடித்ததால் அறிகுறிகள்:
கட்டுவிரியன் பாம்பு கடித்தால் மேல் கூறப்பட்டுள்ள அறிகுறிகளுடன் வயிற்று வலியம் சேர்ந்து வரும். அதுவே கண்ணாடி விரியன் கடித்தால் கடிபட்ட இடத்தில் கடுமையான வலி இருக்கும். மேலும் கடிபட்ட இடத்தில் வலி வீக்கம், மூச்சு திணறல், வாந்தி, சோர்வு, சிறுநீர், மலம் ஆகியவற்றுடன் ரத்தம் வரும்.
கடிபட்ட இடத்தில மனிதன் பற்களை போன்று அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து இருந்தால் அந்த அறிகுறி விஷப்பாம்பு அறிகுறி இல்லை. அதுவே கடிபட்ட இடத்தில் இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதிந்து இருந்து. கடித்த இடம் சற்று தடித்து வீங்கி காணப்பட்டு, கடுமையான வலி ஏற்பட்டால் அது கண்டிப்பாக பாம்பு கடிக்கான அறிகுறியா இருக்கலாம்.
பாம்பு கடி குறித்து பலரிடம் பலவகையான தவறான நம்பிக்கை இருந்து வருகிறது. முதலில் பாம்பு கடித்த இடத்தில் வாய்வைத்து உறிஞ்ச கூடாது, நெருப்பு வைக்க கூடாது, கத்தியால் கீறிவிட கூடாது இவை எல்லாமே தவறான முதலுதவிகள்.
அதேபோல் பாம்பு கடித்த இடத்தில் மஞ்சள் போன்ற பொருள்களைப் பூசக் கூடாது. பாம்பு கடித்தவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவரை நடக்கவைத்து அழைத்து செல்லக் கூடாது. படுக்க வைத்தோ, உட்கார வைத்தோ அழைத்துச் செல்ல வேண்டும். கடித்தது விஷப்பாம்புதானா என்பதை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும். அதற்கு மேல் கூறப்பட்டுள்ள அறிகுறிகளை முதலில் பாம்பு கடிக்கான அறிகுறியை தெரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை அந்த அறிகுறிகள் எல்லாம் தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நுரையீரல் செயலிழந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும்
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |