மண்ணீரல் பாதிப்பு அறிகுறிகள் – Spleen Damage Symptoms in Tamil
ஆரோக்கியமான வாழ்விற்கு உடலில் உள்ள மொத்த ஆர்கன்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இருப்பினும் நாம் அனைவரும், பிரதான உறுப்புகளான இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் என்று தான் நினைப்போம். இதற்கு இணையாக மண்ணீரல் இருப்பது பெரும்பாலும் யாருக்கும் தெரிவதில்லை. மூளைக் காய்ச்சலை, நிமோனியா போன்ற நோய்களை உருவாக்கக்கூடிய சில வகை பாக்டீரியா தொற்றுகளிடம் இருந்து நம்மை பாதுகாப்பதுடன் மட்டுமல்லாமல், நிறைய பணிகளை செய்யக்கூடிய ஒரு உறுப்பு தான் இந்த மண்ணீரல். மண்ணீரல் ஒரு ஆரஞ்சு வடிவ உறுப்பு ஆகும், இது இடது விலா எலும்புக் கூட்டுக்கு கீழே அமைந்துள்ளது, உங்கள் 9, 10 மற்றும் 11 வது விலா எலும்புகளால் இது சூழப்பட்டுள்ளது. இந்த மண்ணீரலின் முக்கிய பணி என்னவென்றால், ரத்தத்தை உருவாக்கி, சேமித்து, வடிகட்டி, நோய் எதிர்ப்பு காரணிகளை உருவாக்கி, உடலைப் பாதுகாக்கிறது. இத்தகைய மண்ணீரலில் பாதிப்பு ஏற்பட்டால் ஏற்படும் அறிகுறிகளை பற்றி நாம் இப்பொழுது பார்க்கலாம் வாங்க.
மண்ணீரல் பாதிப்பு அறிகுறிகள்:
- வேகமான இதயத் துடிப்பு
- வாந்தி
- மயக்கம்
- உடல் எடை அதிகரிப்பு
- வயிற்றில் அபரிமிதமான வலி
- தொண்டை உலர்ந்து போவது
- உடல் முழுதும் வலி
- கால்களில் வீக்கம்
- சாப்பிட்டதும் துாக்கம் வருவது
- எல்லா நேரமும் சோர்வாக உணர்வது
- மஞ்சள் காமாலை
- உயர் ரத்த அழுத்தம்
- கட்டுப்பாடற்ற சிறுநீர்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆட்டிசம் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்
மண்ணீரல் வீக்கம் அறிகுறிகள்
பொதுவாக, மண்ணீரல் வீக்கம் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. இருப்பினும், பின்வரும் அறிகுறிகள் அடிப்படை நோயியல் அல்லது சிக்கலின் விளைவாக இருக்கலாம்:
- இரத்த சோகையை உருவாக்கலாம் மற்றும்/அல்லது வெளிர் நிறமாக தோன்றலாம்
- அடிக்கடி தொற்றுநோய்களை உருவாக்கலாம்.
- உங்களுக்கு எளிதாக இரத்தம் வருவதை நீங்கள் கவனிக்கலாம்.
- உங்கள் வயிற்றின் மேல் இடது பகுதியில் நீங்கள் அசௌகரியம் அல்லது வலியை உணரலாம். சில நேரங்களில், இது உங்கள் இடது தோள்பட்டையில் வலியை வெளிப்படுத்தலாம்.
- நீங்கள் சோர்வாக இருக்கலாம்.
- உங்கள் வயிற்றில் விரிந்த மண்ணீரல் அழுத்துவதன் காரணமாக நீங்கள் சாப்பிடாமலோ அல்லது சிறிதளவு சாப்பிட்ட பிறகும் நிரம்பியதாக உணரலாம்.
- உங்கள் இடது மேல் வயிற்றில் கடுமையான வலி இருந்தால், குறிப்பாக ஆழ்ந்த மூச்சை எடுக்கும்போது வலி மோசமாகிவிட்டால், நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இன்புளுன்சா என்றால் என்ன.. அவற்றின் அறிகுறிகள்
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |