இந்த அறிகுறிகள் இருந்தால் அது மலேரியா காய்ச்சலா..?

Advertisement

Malaria Symptoms in Tamil

Malaria Symptoms in Tamil: வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இந்த பதிவின் வாயிலாக மலேரியா காய்ச்சலின் அறிகுறிகள் பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நாம் வாழும் இந்த காலகட்டத்தில் புதிது புதிதாக நோய்களை கண்டறிந்து வருகிறார்கள். அப்படி இருக்கும் சூழலில் நம் உடலில் ஏதாவது சிறிய அறிகுறி தென்பட்டாலும் நமக்கு பயமாக இருக்கும். அதனால் தான் நம் பதிவின் வாயிலாக தினமும் ஒரு நோயின் அறிகுறிகளை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில், இன்று நம் பதிவின் வாயிலாக மலேரியா காய்ச்சலின் அறிகுறிகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உலக மலேரியா தினம் கட்டுரை

மலேரியா காய்ச்சல் என்றால் என்ன..? 

மலேரியா காய்ச்சல் என்றால் என்ன

மலேரியா காய்ச்சல் என்பது ஒட்டுண்ணியால் ஏற்படும் ஒரு நோயாகும். அதாவது பாதிக்கப்பட்ட கொசுக்கள் மனிதர்களை கடிப்பதன் மூலம் இந்த ஒட்டுண்ணி மனிதர்களுக்கு பரவுகிறது.

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 290 மில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 400,000 க்கும் அதிகமானோர் இந்த நோயால் இறக்கின்றனர். இந்த மலேரியாவானது மிதமான காலநிலையில் சாதாரண நோயாக இருந்தாலும், வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல நாடுகளில் மலேரியா இன்னும் பொதுவான நோயாக இருக்கிறது.

அதுபோல மலேரியா நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளில் வாழும் குழந்தைகளுக்கு மலேரியா தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. காரணம் மலேரியா நோயானது குழந்தைகளை தான் அதிகம் பாதிக்கிறது.

மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக அதிக காய்ச்சலுடனும் நடுக்கத்துடனும் மிகவும் நோய்வாய்ப்படுவார்கள். ஆகையால் மலேரியா நோயின் அறிகுறிகளை தற்போது காணலாம்.

கொசுக்கள் நீரின் மேலே எவ்வாறு நடக்கிறது தெரியுமா

மலேரியா காய்ச்சல் அறிகுறிகள்: 

மலேரியா காய்ச்சல் என்றால் என்ன

ஒருவருக்கு மலேரியா நோய் இருக்கிறது என்பதை நாம் ஒரு சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். அந்த அறிகுறிகளை கீழே காணலாம் வாங்க.

  • காய்ச்சல்
  • குளிர்
  • அசௌகரியத்தின் பொதுவான உணர்வு
  • தலைவலி
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • வயிற்றுப்போக்கு
  • வயிற்று வலி
  • தசை அல்லது மூட்டு வலி
  • சோர்வு
  • விரைவான சுவாசம்
  • விரைவான இதய துடிப்பு
  • இருமல்
  • சிறுநீரக செயலிழப்பு
  • வலிப்பு

மேலும் இதுபோன்ற அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால், உடனே மருத்துவரிடம் சென்று சரியாய் முறையில் சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.

இதை மட்டும் செய்தால் போதும், கொசு தொல்லை, இனிமேல் இருக்காது.

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement