கர்ப்ப அறிகுறிகள் 1 வது வாரம் | 1 Week Pregnancy Symptoms Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் முதல் வாரத்தில் கர்ப்ப அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பதை பின்வருமாறு கொடுத்துளோம். பொதுவாக, ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை என்பது மிகவும் முக்கியமானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் கடவுள் கொடுத்த வரமாகவும் கருதப்படுகிறது. குழந்தை வயிற்றில் உருவாகும் நாள் முதல் பிறக்கும் நாள் வரை உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும்.
குழந்தை வயிற்றில் இருக்கும ஒவ்வொரு மாதமும் உடலில் ஒவ்வொரு விதமான அறிகுறிகள் தோன்றும். அதிலும் குழந்தை வயிற்றில் உருவாக தொடங்கிவிட்டது என்ற நிலை தெரிந்ததும் பெண்களில் உருவாகும் மகிழ்ச்சியை அளவிட முடியாது. முதன் முதலில் கர்ப்பம் ஆகும் பெண்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இருப்பார்கள். இதனால், கர்ப்பமானால் முதல் வாரத்தின் அறிகுறி எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள விரும்புவார்கள். எனவே, பெண்களுக்கு பயனுள்ள வகையில் 1 Week Pregnancy Symptoms Tamil பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
Pregnancy Symptoms 1st Week in Tamil:
மார்பகங்களின் அளவு மாற்றங்கள்:
வழக்கமாக இருப்பதை விட கர்ப்பம் தரிக்கும் ஆரம்ப காலத்தில் மார்பகங்கள் பெரிதாகவும், வீக்கமாகவும், உணர்திறனுடனும் இருப்பது போல் இருக்கும். மார்பக காம்புகள் கருப்பு நிறத்தில் மாறும். ஒரு சில பெண்களுக்கு மார்பகத்தில் வலி ஏற்படலாம். இதுபோன்ற அறிகுறிகள் முதல் வார கர்ப்பத்தின் அறிகுறியாக இருக்கலாம்.
குமட்டல் மற்றும் வாந்தி:
கர்ப்பத்தின் பொதுவாக அறிகுறி குமட்டல் மற்றும் வாந்தி ஆகும். காலை நேரத்தில் குமட்டல் மற்றும் வாந்தி தொடர்ந்து இருந்தால் அது கர்ப்பத்தின் அறிகுறியாக இருக்கலாம்.
தசைபிடிப்பு:
கருப்பையில் அதிக செயல்பாடு காரணமாக உடலில் லேசான தசைபிடிப்புகள் உண்டாகும்.
சோர்வு:
வயிற்றில் கரு உருவாக தொடங்கினால் உடலில் சோர்வான நிலை உண்டாகும். உடலானது எப்போதும் அசதியாகவே இருக்கும். இது பெரும்பாலும், பாலியல் ஹார்மோன் புரோஜெஸ்ட்டிரோனின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காரணமாக ஏற்படலாம்.
உணவின் மீது அதிக ஆசை:
கர்ப்ப காலத்தில் உணவுகளின் மீது அதிக ஆசை இருக்கும். குறிப்பாக பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் மீது அதிகமான இருக்கும். வழக்கமாக இல்லாதது போல் நீங்கள் உணவின் மீது அதிக ஆசை கொண்டால் கர்ப்பத்தின் அறிகுறியாக இருக்கும்.
மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சல்:
கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் செரிமான அமைப்பை பாதிக்கக்கூடும். இதனால், மலசிக்கல் ஏற்படும். மேலும், நெஞ்செரிச்சல் போன்ற அறிகுறிகளும் தோன்றும்.
மனநிலை மாற்றங்கள்:
கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினால் மனநிலை குழப்பங்களை ஏற்படுத்துகிறது. ஒரு சில பெண்களுக்கு எரிச்சல் போன்ற உணர்வுகளை உண்டாகும்.
கர்ப்பப்பை வாய் வெளியேற்றம்:
பிறப்புறுப்பு வெளியேற்றம் அதிகரிப்பது ஒரு பொதுவான கர்ப்ப அறிகுறியாகும். இதுபோன்று இருந்தால் கர்ப்பத்தின் அறிகுறியாக இருக்கலாம்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு:
கர்ப்பகாலத்தில் சிறுநீரகங்களில் அதிக இரத்த ஓட்டம் ஏற்படுவதால், அடிக்கடி சிறுநீர் கழிப்பது அல்லது அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வும் உண்டாகும்.
மேலே கூறப்பட்டுள்ள அறிகுறிகள் அனைத்தும் முதல் வார கர்ப்பத்தின் அறிகுறிகள் ஆகும்.
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |