45 நாள் கர்ப்பம் அறிகுறிகள்
பெண்களின் வாழ்க்கையில் முக்கியமான தருணம் என்றால் அவை திருமணம் தான். திருமணம் முடிந்த பிறகு அவளின் பொறுப்புகள் அதிகரிக்கிறது. திருமணம் ஆன சில நாட்கள் கழித்து எங்கேயாவது வெளியே சென்றால் மகிழ்ச்சியான செய்தி ஏதும் இருக்கிறதா என்று கேட்பார்கள். கர்ப்பம் என்பது சில பெண்களுக்கு சீக்கிரமே நடக்கும், சில பெண்களுக்கு மாதம் மற்றும் வருடம் கூட ஆகும். இப்படி இருப்பதில் சில பெண்களுக்கு தான் கர்ப்பம் அடைந்திருக்கிறார்கள் என்பது கூட தெரியாமல் இருக்கிறார்கள். நம் உடலில் சிறியதாக காய்ச்சல் வர போகிறது என்றால் அதற்கான அறிகுறிகள் வெளிப்படும். அப்படி இருக்கும் போது கர்ப்பத்திற்கான அறிகுறிகளும்இருக்கிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் 45 நாள் கர்ப்பம் அறிகுறிகளை பற்றி அறிந்து கொள்வோம்.
45 நாள் கர்ப்பம் அறிகுறிகள்:
மாதவிடாய் தள்ளிப்போவது:
பொதுவாக கர்ப்பமாக இருப்பதை அறிந்து கொள்வதற்கு முதல் அறிகுறியாக இருப்பது மாதவிடாய் தள்ளிப்போவது தான். நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது மாதவிடாய் எப்போதும் வர நாட்களில் வராமல் நாட்கள் தள்ளிப்போனால் கர்ப்பமாக இருப்பதை உணர்த்துகிறது.
உடல் சோர்வு:
நீங்கள் கர்ப்பமாக இருக்கின்றீர்கள் என்றால் உங்களின் உடலானது சோர்வாகவும், எரிச்சலாகவும் இருக்கும்.
வாந்தி மற்றும் குமட்டல்:
45 நாட்களில் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சனை ஏற்படும்.
சில நபர்களுக்கு உடல் வெப்பநிலையானது எப்போதும் போல இல்லாமல் சற்று வெப்பநிலை அதிகமாக இருக்கும்.
குளிர் காய்ச்சல் வருவதற்கான அறிகுறிகள்
மார்பக மாற்றங்கள்:
மார்பகமானது எப்போதும் போல இல்லாமல் வடிவமானது மாறுபடும். சில பேருக்கு மார்பகம் வீக்கமாகவும் காணப்படும்.
சிறுநீர் கழித்தல்:
நம் உடலில் நடக்கும் ஹார்மோன்கள் மாற்றங்களால் இரத்த ஓட்டம் அதிகமாகுகின்றன. இதனால் எப்போதும் சிறுநீர் கழிப்பதை விட அதிகமாக சிறுநீர் கழிப்பீர்கள்.
பசியின்மை:
நீங்கள் விரும்பி சாப்பிட கூடிய உணவு கூட கர்ப்பமாக இருக்கும் போது வெறுப்பாக இருக்கும். மேலும் உணவு வாசனையை விரும்ப மாட்டீர்கள். உணவை பார்த்தாலே வெறுப்பாக இருக்கும்.
மலசிக்கல்:
நீங்கள் எப்போதும் சாப்பிடும் உணவின் அளவை விட குறைத்து சாப்பிட்டாலும், வயிறு நிரம்பியதாக இருக்கும். இவை செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
மேலும் மலசிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தும், அதனால் தண்ணீரை அதிகமாக குடிக்க வேண்டும். நார்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |