5 வது மாத கர்ப்ப அறிகுறிகள் இவை தான் | 5 Month Pregnancy Symptoms Tamil
ஒரு பெண் கர்ப்பம் அடைதல் என்பது அப்பெண்ணிற்கு மட்டும் இல்லாமல் அந்த குடும்பத்திற்கே மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் ஒரு தருணமாக தான் உள்ளது. அந்த வகையில் பார்த்தோம் என்றால் சிலருக்கு குழந்தை பாக்கியம் என்பதே இல்லாமல் கூட இருக்கிறது. இதற்கு மாறாக மற்ற சிலர் தான் கர்ப்பமாக இருப்பதை கூட தெரிந்துகொள்ளலாமல் இருக்கிறார்கள். ஆனால் நம்முடைய உடலில் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் எப்படி அறிகுறிகள் வருகிறதோ அதே போல ஒரு பெண் கர்ப்பம் அடைந்து இருப்பதை உணர்த்துவதற்கு என்றும் அறிகுறிகள் உள்ளது.
அதுமட்டும் இல்லாமல் இந்த அறிகுறிகள் அனைத்தும் ஒவ்வொரு மாதத்திற்கும் வெவ்வேறு மாதிரியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. ஆகவே இன்றைய பதிவில் 5 மாதம் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு தோன்றும் அறிகுறிகளை தான் பார்க்கப்போகிறோம்.
5 மாத கரு வளர்ச்சி எப்படி இருக்கும்?
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் ஆரம்ப காலத்தில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 5-வது மாதத்தில் 10 அவுன்ஸ் எடையும், 6 அல்லது 7 அங்குலம் வரையிலும் கரு வளர்ச்சி அடைந்து இருக்கும்.
உங்களின் வயிறு நன்றாக விரிவடைந்து இருப்பதை நீங்கள் நன்றாக பார்க்க முடியும். மேலும் இவ்வாறு வயிறு விரிவடையும் போது தோலில் அரிப்புகள் உண்டாகும்.
அதேபோல் 5-வது மாதத்தில் கருவின் அசைவு என்பது ஒரு சிலருக்கு தெரிய ஆரம்பித்து விடும். மேலும் கர்ப்பிணிகளின் முகம் என்பது வழக்கத்திற்கு மாறாக பளபளப்பாக இருக்கும். கரு வளர்ச்சி அடையும் காரணத்தினால் உங்களின் மார்பகங்கள் விரிவடைவதோடு பாலும் சுரக்க ஆரம்பமாகிவிடும்.
மாதவிலக்கு முன் அறிகுறிகள் |
5 மாத கர்ப்ப அறிகுறிகள் யாவை?
- வழக்கத்திற்கு மாறான பசி
- மலச்சிக்கல்
- நெஞ்சு எரிச்சல்
- முதுகுவலி
- கால் மற்றும் முழங்கால் பகுதியில் வீக்கம்
- அடிக்கடி தசைப்பிடிப்பு
- மூக்கு அடைப்பு
- தோல் அரிப்பு மற்றும் புதிய மாற்றம்
மேலே சொலல்ப்பட்டுள்ள அறிகுறிகள் நீங்கள் 5-வது மாதத்தில் உணரலாம்.
ஆரம்பகால கர்ப்ப அறிகுறிகள் |
5 மாத கர்ப்பிணி என்ன உணவு சாப்பிடலாம்:
- பால்
- தயிர்
- பழங்கள்
- காய்கறிகள்
- மீன், கோழி
- முட்டை
- தானிய வகைகள்
மேலே சொல்லப்பட்டுள்ள உணவுகளை மருத்துவரின் ஆலோசனை படி சரியான அளவில் எடுத்துகொள்ள வேண்டும்.
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |