கருச்சிதைவிற்கான அறிகுறிகள் என்ன | Abortion Symptoms in Tamil

Advertisement

கருச்சிதைவிற்கான அறிகுறிகள் என்ன | Abortion Symptoms in Tamil..!

பொதுவாக மனிதர்கள் அனைவருக்கும் வரும் நோயில் நமக்கு தெரியாத எண்ணற்ற வகையில் இருக்கிறது. அதிலும் சில நோய்களிலேயே 10-ற்கும் மேற்பட்ட வகைகளில் உள்ளடங்கி இருக்கிறது. நோய்களில் எப்படி பல வகைகள் இருக்கிறதோ அதே போல அத்தகைய நோய்களுக்கான அறிகுறிகளும் ஒன்றுடன் ஒன்று வேறுபட்டு தான் காணப்படுகிறது. ஆனால் அத்தகைய அறிகுறிகளில் பெரும்பாலான அறிகுறிகளில் நமக்கு பெரிதாக தெரிவது இல்லை. அதனால் இன்று பெண்கள் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய கருச்சிதைவு அறிகுறிகள் என்னென்ன என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

கருச்சிதைவு என்றால் என்ன..?

கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் 20 வாரங்களுக்கு முன் அல்லது முதல் மூன்று மாதங்களில் கருவை இழக்கும் சூழல் ஏற்படும் நிகழ்வே கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பு எனப்படுகிறது.

மேலும் ஒரு சிலருக்கு கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்யும் முன்போ அல்லது தெரிவதற்கு முன்பாகவோ இத்தகைய கருச்சிதைவு ஆனது நிழல்கிறது.

கருச்சிதைவின் வகைகள்:

  1. முழுமையற்ற கருச்சிதைவு
  2. முழுமையான கருச்சிதைவு
  3. தவிர்க்க முடியாத கருச்சிதைவு
  4. தவறவிடப்பட்ட கருச்சிதைவு
  5. அச்சறுத்தலான கருச்சிதைவு
சுகப்பிரசவத்தின் அறிகுறிகள்

கருச்சிதைவு எதனால் ஏற்படுகிறது:

கருச்சிதைவு அறிகுறிகள்

  • பெண்களின் கருப்பையில் வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது கருவானது கருப்பையில் சரியாக பொருந்தாமல் இருந்தாலோ கருச்சிதைவு ஏற்பட வழிவகுக்கிறது.
  • அதேபோல் கருப்பையில் தந்தையிடம் இருந்து 2 குரோமோசோம்களும் வந்து இருந்தால் கரு வளர்ச்சி ஆனது இருக்காது. இதற்கு மேலோர் கர்ப்பம் என்று பெயர். இந்த நிகழ்வாலும் கருச்சிதைவு ஏற்படுகிறது.
  • இவ்வாறு இல்லாமல் தாயிடம் 1 குரோமோசோம்களும், தந்தையிடம் இருந்து 2 குரோமோசோம்களும் வந்து இருந்தாலும் கூட கருச்சிதைவு ஏற்படுகிறது. இதுபோன்ற கர்ப்பத்திற்கு பகுதி மேலோர் கர்ப்பம் என்று பெயர்.
  • மேலே சொல்லப்பட்டுள்ள காரணங்கள் இல்லாமல் ஹார்மோன் பிரச்சனை, தைராய்டு பிரச்சனை மற்றும் சர்க்கரை நோய் பிரச்சனை இதுபோன்ற போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் கூட கருச்சிதைவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
  • அதேபோல் அதிக எடை உள்ள பொருட்களை தூக்குதல், சத்து குறைபாடு, உடல் எடை குறைவு இதுபோன்ற காரணங்களும் மேலே சொல்லப்பட்டுள்ள முறைகளில் உள்ளடங்கும்.

கருச்சிதைவு அறிகுறிகள்:

  • பிறப்புறுப்பு இரத்தப்போக்கு
  • லேசான மற்றும் அதிகமான முதுகு வலி
  • அதிகமான வயிற்று வலி
  • வயிற்றில் தசை பிடிப்பு
  • பிறப்புறுப்பில் இருந்து திரவம் அல்லது திசு வெளியேறுதல்

கர்ப்பம் முற்றிருக்கும் பெண்களுக்கு மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் இல்லாமல் வேறு ஏதேனும் அறிகுறிகள் தோன்றினாலும் அதனை அலட்சியப்படுத்தக்கூடாது.

கர்ப்பமாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் 

 

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement