அசிடிட்டி அறிகுறிகள்
இன்றைய கால கட்டத்தில் ஒரு நோயும் இல்லாமல் இருப்பவனே பணக்காரனாக கருதப்படுகிறது. அந்த அளவிற்கு ஆரோக்கியம் சீர் குழைந்து காணப்படுகிறது. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஏதவாது ஒரு நோயால் பாதிக்கப்படுகின்றனர். நோய் வந்ததும் அதனை எப்படி சரி செய்வது என்பதை விட நோய் வருவதற்கு முன்பே அதனை கண்டறிந்தால் நோய்களை குணப்படுத்த கொஞ்சம் ஈசியாக இருக்கும். அதனால் இந்த பதிவில் அசிடிட்டி பிரச்சனைக்கான அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
அசிடிட்டி என்றால் என்ன.?
நாம் சாப்பிடும் உணவு பொருட்களை கரைப்பதற்கு வயிற்று பகுதியில் உள்ள ஹைட்ரோகுளோரிக் என்ற அமிலம் சுரக்கிறது.இந்த அமிலமானது வயிற்றில் பிரச்சனையை ஏற்படுத்தும் பாக்ட்ரியாக்களிலுருந்து எதிர்த்து போராடி வயிற்றை பாதுக்காக்க உதவுகிறது.
ஆனால் நமது உணவு குழாயானது மென்மையாக காணப்படும். இதனால் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை எதிர்த்து போராடும் சக்தி கிடையாது. அதனால் சில நேரங்களில் அமிலத்தன்மை உணவு குழாய் வழியாக சென்று அசிடிட்டியை ஏற்படுத்துகிறது.
இந்த அறிகுறி இருந்தால் உடனே மருத்துவரை பாருங்கள் |
அசிடிட்டி அறிகுறிகள்:
உணவு சாப்பிட்ட பிறகு நெஞ்செரிச்சல் ஏற்படும். இவை நெஞ்சில் மட்டுமில்லை வயிறு முதல் தொண்டை வரைக்குமே எரியும் உணர்வு காணப்படும்.
நீங்கள் சாப்பிட்டவுடன் ஏப்பம் வருவது இயற்கையானது. ஆனால் புளித்த சுவை அல்லது கசப்பான சுவையில் ஏப்பம் வருவது அசிடிட்டியின் அறிகுறிகளாகும்.
உணவு சாப்பிடும் போது விழுங்குவதில் சிரமம் ஏற்படும்.
குமட்டல் மற்றும் வாந்தி பிரச்சனை ஏற்படும்.
திடீரென எடை இழப்பு ஏற்படும்.
மூச்சுத்திணறல், வறட்டு இருமல், தொண்டை கரகரப்பு அல்லது நாள்பட்ட தொண்டை புண்.
வாயில் துர்நாற்றம் அல்லது வாயில் ஒரு கெட்ட சுவையை அறிவது.
நெஞ்சு வலி
தொண்டை வீக்கம் அல்லது தொடர்ந்து விக்கல் ஏற்பட்டாலும் கவனிக்க வேண்டும்.
மலம் கழிக்கும் போது ரத்த கசிவு ஏற்படுதல், மற்றும் மலமானது கருப்பு நிறத்தில் வெளியேறுதல்
மேல் கூறப்பட்டுள்ள அறிகுறிகள் அசிடிட்டியின் அறிகுறிகளாக இருக்கிறது. இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் அலட்சியம் செய்யாமல் மருத்துவரிடம் காண்பித்து அதற்கான ஆலோசனையை பெறுவது அவசியமானது.
வெரிகோஸ் வெயின் நோயின் அறிகுறிகள் என்ன தெரியுமா |
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |