வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அல்சைமர் நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா..?

Updated On: July 1, 2023 5:56 AM
Follow Us:
Alzheimer's Disease Symptoms in Tamil
---Advertisement---
Advertisement

Alzheimer’s Disease Symptoms in Tamil

அல்சைமர் என்பது நரம்பியல் சிதைவினால் மெதுவாக ஆரம்பித்து நாட்கள் செல்ல செல்ல மோசமான நிலையை அடையும் ஒரு நாட்பட்ட நோயாகும். இது பொதுவாக அறிவாற்றல் இழப்பின் அல்லது மறதிநோயின் மிகப் பொதுவான வடிவம் ஆகும். அதாவது 60 -70 % ஆன மறதிநோய் இந்த ஆல்சைமர் நோயினால் ஏற்படுவதே ஆகும். இந்நோய்யானது திசுக்கள் அழிவினால் உருவாகும். குணப்படுத்த முடியாத இந் நோயை 1906 ஆம் ஆண்டில், செருமானிய மனநோய் மருத்துவரான ஆலோயிசு ஆல்சைமர் (Alois Alzheimer) என்பவர் தான் முதன் முதலில் கண்டறிந்து அதனை பற்றி விரிவாக விளக்கினார். பொதுவாக 65 வயதுக்கு மேற்பட்டோரில் 6% மானவர்களில் இந்நோய் காணப்படுவதுடன், வயது அதிகரிக்கையில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.

மிகவும் அரிதாகவே இது 65 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஏற்படுகிறது. அதாவது 2006-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் உலகம் முழுவதும் 26.6 மில்லியன் நபர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் 2015-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் உலகம் முழுவதும் 29.8 மில்லியன் நபர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது 2050-ஆம் ஆண்டில் நான்கு மடங்காக அதிகரிக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. இதற்கான சிகிச்சைகளும் இன்னும் கண்டறியப்படவில்லை. அதனால் இந்த நோயினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அதன் தாக்கத்தை குறைக்கலாம். அதற்கு முதலில் நமக்கு இந்த நோயிக்கான அறிகுறிகள் தெரிந்திருக்க வேண்டும். எனவே தான் இந்த பதிவில் அல்சைமர் என்ற நோய்க்கான அறிகுறிகளை அறிந்து கொள்வோம் வாங்க..

Dementia நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா

அல்சைமர் நோய் அறிகுறிகள்:

 Alzheimer's Disease in Tamil

இந்த நோயிக்கான அறிகுறிகளை தெரிந்து கொண்டால் மட்டுமே நமது நண்பர்களோ அல்லது உறவினர்களோ இதனால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு உதவி செய்யமுடியும்.

அவை என்னென்ன அறிகுறிகள் என்பதை இங்கு விரிவாக காணலாம் வாங்க.

  • சமீபத்திய நிகழ்வுகளை மறத்தல்
  • மொழிப் பயன்பாட்டில் பிரச்சினைகள் ஏற்படல்.
  • மனநிலை ஊசலாட்டம்
  • சுய பராமரிப்பு மேலாண்மை பிரச்சினைகள்
  • நடத்தை பிரச்சினைகள்

மேலே கூறியுள்ள அறிகுறிகளோடு நோயுற்றவரின் இயல் நிலையில் குறைபாடு ஏற்படும்போது, அவர்கள் தம் குடும்பம் மற்றும் சமூகத்திலிருந்து விலகுகின்றனர். மேலும் படிப்படியாக, உடல் செயல்பாடுகள் குறைந்து, இறுதியில் மரணத்தை அடைகின்றனர்.

ஆளுமை சீதைவுக்கான அறிகுறிகள் என்ன தெரியுமா

இந்தெந்த அறிகுறிகள் இருந்தா அது தொழுநோயாம் அது என்னென்ன அறிகுறிகள் என்று தெரிந்து கொள்ளுங்க

விழித்திரையில் புற்றுநோய் ஏற்பட்டால் இந்த அறிகுறிகள் தான் இருக்குமா

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Liver Cancer Symptoms in Tamil

கல்லீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

vitamin d deficiency symptoms in tamil

உடம்பில் ஏற்படும் வைட்டமின் டி குறைபாட்டிற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா..?

Symptoms of Salt Deficiency in Tamil

உப்பு சத்து குறைந்தால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும்..?

Chicken Pox Symptoms in Tamil

சின்னம்மை (சிக்கன் பாக்ஸ்) அறிகுறிகள் | Chicken Pox Symptoms in Tamil

fistula symptoms in tamil

பிஸ்துலா என்றால் என்ன.. அதன் அறிகுறிகள்..

aan pen kulanthai arikurigal

கருவில் இருக்கும் குழந்தை ஆணா,பெண்ணா என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்

Tonsils Symptoms in Tamil

தொண்டையில் சதை வளர்ச்சி இருந்தால் என்ன அறிகுறிகள் ஏற்படும்..?

Symptoms of Typhoid in Tamil

டைபாய்டு காய்ச்சல் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

Gerd Symptoms in Tamil

உணவு குழாயில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..!