Appendix Symptoms in tamil..!
வணக்கம் அன்பான நண்பர்களே… இன்றைய பதிவில் குடல்வால் பிரச்சனை இருந்தால் என்ன அறிகுறிகள் உங்களுக்கு ஏற்படும் என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம். இந்த குடல்வால் என்பது நமது பெருங்குடல் பகுதியில் காணப்படுகிறது. இந்த குடல் வாலில் வீக்கம் ஏற்படுவதைத் தான் நாம் குடல்வால் அழற்சி என்று கூறுகிறோம். இன்றைய கால கட்டத்தில் நாம் அனைவரும் சரியான உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிடுவது இல்லை. அதிலும் சிலர் சாப்பிடுவதே இல்லை. இன்றைய நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காலை உணவை தவிர்க்கின்றனர். இப்படி சரியாக சாப்பிடாததால் குடலில் வீக்கம் ஏற்பட்டு குடல்வால் அழற்சி ஏற்படுகிறது. இந்த பதிவின் மூலம் குடல்வால் இருப்பதற்கான அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க.
இதையும் பாருங்கள் ⇒ சிறுநீர் தொற்று இருந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும்
குடல்வால் வர காரணம்:
குடல்வால் அழற்சி நோய் என்பது குடல்வாலில் ஏற்படும் வீக்கம் ஆகும். பெருங்குடலின் முற்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய குழாய் போன்ற அமைப்பு தான் குடல்வால். சிறுகுடலும் பெருங்குடலும் சந்திக்கின்ற பகுதியில் வால் போன்ற பகுதி இருக்கும். இது தான் குடல் வால் என்று அழைக்கப்படுகிறது.
இது ஆங்கிலத்தில் (Appendix) என்று அழைக்கப்படுகிறது. குடல்வாலில் ஏதாவது அடைப்பு ஏற்படும் போது குடல்வால் அழற்சி ஏற்படுகிறது. இதனால் குடல்வால் தொற்றுநோயும் ஏற்படலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த வயதினராக இருந்தாலும் குடல்வால் அழற்சிப் பாதிப்பு ஏற்படலாம்.
இதை ஆரம்பத்திலேயே கவனிக்க தவறினால் குடல்வால் வெடிப்பதற்கான ஆபத்தும் இருக்கிறது. கீழ்காணும் அறிகுறிகளை வைத்து குடல்வால் இருப்பதை உறுதி செய்யலாம் வாங்க…
குடல்வால் நோய் அறிகுறிகள் என்ன:
- முதலில் தொப்புள் பகுதியில் தான் வலி இருக்கும். அதன் பின் வயிற்றை சுற்றி கடுமையான வலி ஏற்படும். அடிவயிற்றின் கீழ் வலது பக்கத்தில் கடுமையான வலி இருக்கும்.
- குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும். தண்ணீர் குடித்தால் கூட அது குமட்டலை ஏற்படுத்தும்.
- பசி உணர்வு இருக்காது. வயிறு கனமாக இருப்பதாக உணர்வீர்கள். வயிறு வீக்கமாக இருக்கும். வயிறு முழுவதும் ஏதோ இருப்பதாக உணர்வீர்கள்.
- குடல்வால் அழற்சி ஏற்பட்ட கொஞ்ச நேரத்தில் கடுமையான காய்ச்சல் ஏற்படும்.
- குடல்வால் அழற்சி இருந்தால் மலசிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
- ஏப்பம் மற்றும் ஆசன வாய் வழியாக காற்றுப் பிரிவது போன்ற உணர்வு ஏற்படும்.
- சிறுநீர் கழிக்கும் போது வயிற்று உறுப்புகளில் வலி இருந்தால் குடல்வால் இருப்பதை உறுதி செய்யலாம்.
குறிப்பு: மேற்கூறிய அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். குடல்வால் இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். தவறினால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |