Bladder Cancer Symptoms in Tamil
நமது உடலில் உள்ள பெரும்பாலான கழிவுகளை வெளியேற்றும் வேலையை செய்வது சிறுநீரகம் தான். அவ்வாறு வெளியேற்றும் கழிவுகளை வெளியேற்றுவதற்கு முன்னால் சிறுநீரகத்தில் சேகரித்து வைக்கும் ஒரு வெற்றுதசையே சிறுநீர்ப்பையாகும். சிறுநீர்ப்பையில் உள்ள இழையங்களில் ஏற்படும் புற்றுநோய் தொற்றே சிறுநீர்ப்பை புற்றுநோய் (Bladder Cancer) ஆகும். இந்த நோயானது உயிரணுக்கள் அபரிமிதமான வளர்ச்சியடைந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவப்படும் திறன் பெற்றது ஆகும். இந்த நோயானது பொதுவாக 50 முதல் 70 வயது உள்ளவர்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது. இது புகையிலை பிடித்தல், மரபு வழி நோய்கள், முந்தைய கதிரியக்கச் சிகிச்சைகள், அடிக்கடி சிறுநீர்ப்பையில் ஏற்படும் தொற்றுகள் மற்றும் நாம் பயன்படுத்தும் சில வேதியியல் பொருட்களால் ஏற்படுகிறது.
2015 ஆம் ஆண்டின் நிலவரப்படி சிறுநீர்ப்பை புற்றுநோயினால் 3.4 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். 430,000 மக்கள் ஆண்டுதோறும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. 2015 -யில் 188,000 பேர் இதனால் இறந்துள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் புற்றுநோயின் நிலைகளைப் பொறுத்து அதற்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. அறுவைச் சிகிச்சை, வேதிச்சிகிச்சை, கதிரியக்கச் சிகிச்சை அல்லது நோயெதிர்ப்புச் சிகிச்சை போன்ற பல வழிகளில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அதற்கு முன்னால் இந்த சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும். அதனால் சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகளை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறுநீர்ப்பை புற்றுநோய் அறிகுறிகள்:
சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகளை நாம் அறிந்திருப்பது மிகவும் அவசியமாகும். இந்த நோயின் அறிகுறிகள் தெரிந்திருந்தால் மட்டுமே அதன் ஆரம்ப நிலையிலேயே தடுத்து ஒரு உயிரை காப்பாற்றலாம். சரி வாங்க அது என்னென்ன அறிகுறிகள் என்று பார்க்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சிறுநீர்ப்பையில் கற்கள் இருந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும்
இதற்கான முதல் அறிகுறி ஹேமடுரியா அல்லது சிறுநீரில் இரத்தம் கசிவது ஆகும். இந்த நிலையில் பொதுவாக வலி இருக்காது. அதனால் நீங்கள் அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.
அடுத்து சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரியும் உணர்வு ஏற்படும்.
வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டுதல். அதாவது இரவு முழுவதும் பல முறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுதல்.
உடனடியாக சிறுநீர் கழிக்கவேண்டுமென்று உந்துதல்.
சிறுநீர்ப்பைக்கு அப்பால் புற்றுநோய் பரவுகையில், முதுகுவலி, எலும்பு வலி, நீர்க்கட்டு அல்லது கால்கள் வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறது.
புற்றுநோய் முற்றிவிட்ட நிலையில் எடை இழப்பு.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சிறுநீர் தொற்று நீங்க வீட்டு வைத்தியம்
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |