சிறுநீர்ப்பை இறக்கம் அறிகுறிகள் பற்றி தெரியுமா.?

Advertisement

சிறுநீர்ப்பை இறக்கம் அறிகுறிகள்

நமது உடம்பில் ஒவ்வொரு உறுப்பும் ரொம்ப முக்கியமானது. அதில் ஒன்று தான் சிறுநீர்ப்பை. இவை உடலில் இருந்து வெளியேற்றுவதற்கு முன்  கழிவு நீரை சேமித்து வைக்கிறது. இப்படி முக்கியமாக இருக்க கூடிய உறுப்பு இறங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதாவது சிறுநீர்ப்பை இறக்கம் அல்லது நீர்ப்பை இறக்கம் என்று கூறுவார்கள். இவை இறங்கிய பின்பு அதற்கான தீர்வை காண்பதை விட வருவதற்கு முன்னரே அறிந்தால் அதனை எளிதாக குணப்படுத்திவிடலாம். பொதுவாக சிறுநீர்ப்பை வயதான பிறகு பலவீனத்தால் இறங்கும். அதனால் இந்த பதிவில் சிறுநீர்ப்பை இறக்கம் அறிகுறிகளை தெரிந்து கொள்வோம் வாங்க..

சிறுநீர்ப்பை இறக்கம் அறிகுறிகள்:

Bladder prolapse symptoms in tamil

இடுப்பு பகுதியில் வீக்கம்

சிறுநீர் கழிக்கும் போது சிரமம் ஏற்படுதல்

சிறுநீர் கழித்த பின்பும் முழுமையாக சிறுநீரை கழிக்காதது போல் உணர்வு.

சிறுநீரை அடிக்கடி கழித்தல்

மலம் அடிக்கடி வெளியேற்றுதல்

இரத்தப்போக்கு

உடல் சோர்வு ஏற்படுதல்

முதுகுவலி மற்றும் இடுப்பு வலி

கருப்பை இறக்கம் இருப்பதை காட்டும் அறிகுறிகள் என்ன

சிறுநீர்ப்பை இறக்கம் காரணங்கள்:

பெண்களுக்கு பிரசவம் ஆன பிறகு சிறுநீர்ப்பையை ஆதரிக்கும் யோனி திசுக்கள், மற்றும் தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

மாதவிடாய்க்கு முன், பெண்களின் உடல்கள் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனை உருவாக்குகின்றன , இது யோனி மற்றும் அதைச் சுற்றியுள்ள தசைகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. மாதவிடாய் நின்ற பிறகு பெண்களின் உடல்கள் ஈஸ்ட்ரோஜனை உருவாக்குவதை நிறுத்துகின்றன , இதன் விளைவாக அந்த தசைகள் பலவீனமடைகின்றன.

பெண்ணுறுப்பில் உள்ள தசைகளின் வலிமையையும், ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவும் ஈஸ்ட்ரோஜன் மாதவிடாய் நின்ற பிறகு உற்பத்தி செய்யாததால் சிறுநீர்ப்பை  இறக்கத்திற்கு காரணமாக இருக்கின்றன.

நுரையீரல் செயலிழந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும்

கனமான பொருட்களை தூக்குதல், மலசிக்கல், குடல் அசைவுகளின் போது சிரமபடுதல் போன்றவை சிறுநீர்ப்பை இறக்கத்திற்கு காரணமாக இருக்கின்றன.

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil

 

Advertisement