Brain Cancer Symptoms in Tamil
பொதுவாக நமது உடலின் மிக மிக முக்கியான பாகம் எதுவென்றால் அது மூளை தான். அதாவது நாம் செய்யும் அனைத்து செயல்களையும் நமக்கு சரியாக செய்வதற்கு உதவுவது நமது மூளை தான். இப்படிப்பட்ட மூளையில் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் அது நமது உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும். ஏன் நமது உயிர்கூட போக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால் தான் நமது மூளையின் செய்யல்பாட்டை சரியாக கவனிக்க வேண்டும். அதில் ஏதாவது சிறிய மற்றம் ஏற்பட்டாலும் நம்மை நாம் மிக மிக கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் மூளை புற்றுநோய்கான அறிகுறிகளை பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து உங்களையும் உங்கள் உடன் இருப்பவர்களையும் பாதுகாத்து கொள்ளுங்கள்.
அல்சைமர் நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா
மூளை புற்றுநோய் என்றால் என்ன..?
மூளை புற்று நோய் என்பது கட்டுப்பாடற்ற அணுக்களின் பிரிவின் விளைவாக மூளையில் அசாதாரணமாக உண்டாகும் வளர்ச்சி ஆகும். பொதுவாக மூளை புற்றுநோய் ஒரு வீரியம் மிக்க மூளைக் கட்டியுடன் தொடங்குகிறது.
அதாவது சில நேரங்களில் இந்த புற்றுநோய் கட்டிகள் மிக விரைவாக வளர்ந்து, உடலின் வேலை செய்யும் முறையை சீர்குலைக்கும். இதில் இரண்டு வகை உள்ளது. அதாவது தீங்கற்ற புற்றுநோய் மற்றும் தீங்கான புற்றுநோய்.
இதில் முதல் வகையானது இவை தாழ்ந்த நிலையை சார்ந்த கட்டிகள் (1 அல்லது 2), மெதுவாக வளரும் தன்மை கொண்டவை மற்றும் இவை சிகிச்சைக்கு பிறகு அரிதாக திரும்பி வரும்.
இரண்டாவது வகையானது இவை உயர்த்தர கட்டிகள் (3 அல்லது 4), இவை மூளையில் உண்டாகி பிற பகுதிகளை தாக்கும் அல்லது வேறு எங்காவது தொடங்கி மூளையை தாக்கும்.
எந்தவகையான இருந்தாலும் ஆரம்பநிலையில் கண்டறிந்தால் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றலாம். அதற்கு முதலில் இதற்கான அறிகுறிகள் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். சரி வாங்க முலை புற்றுநோய்க்கான அறிகுறிகளை காணலாம்.
மூளை புற்றுநோய் அறிகுறிகள்:
நாள்பட்ட தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? இது மூளை புற்றுநோயின் அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம். அதிலும் குறிப்பாக இரவில் மட்டுமே தோன்றும் நிலையான தலைவலி.
குமட்டல் அல்லது வாந்தி.
கைகள் அல்லது கால்களில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு.
சிந்தனையில் சிரமம் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமை.
நடப்பது அல்லது உடலின் இயக்கத்தை சமன் செய்வது கடினம் ஏற்படுவது.
பேச்சு குளறுதல் அல்லது பேசுவதில் சிரமம் ஏற்படுவது.
பார்வை பிரச்சினைகள்.
கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுவதற்கான அறிகுறிகள்
Dementia நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா
ஆளுமை சீதைவுக்கான அறிகுறிகள் என்ன தெரியுமா
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |