மூளை பக்கவாதம் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா..?

brain stroke symptoms in tamil

Brain Stroke Symptoms 

மனிதர்களாக பிறந்த நாம் அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் அதற்கு முதலில் நம் உடலில் உள்ள உடல் உறுப்புகள் அனைத்தும் நல்ல முறையில் செயல்பட வேண்டும். அதிலும் குறிப்பாக கண், கை, கால், தலை மற்றும் சிறுநீரகம் இவற்றை எல்லாம் மிகவும் இன்றியமையாத ஒன்றாக கருதப்படுகிறது. இவை மட்டும் இல்லாமல் நாம் செயலை நம்மை சிந்திக்க வைக்கவும் மற்றும் ஞாபக படுத்தவும் மிகவும் அவசியமாக இருப்பது நம்முடைய மூளை தான். இவ்வாறு இருக்கையில் நம்முடைய உடலில் சாதாரணமாக காய்ச்சல் வந்தால் கூட அதற்கு என்று சில அறிகுறிகள் நமக்கு தோன்றும். அதேபோல் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி அறிகுறிகள் இருக்கிறது. அதனால் இன்று மூளையில் பக்கவாதம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்னவென்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

மூளை பக்கவாதம் என்றால் என்ன.?

மூளை பக்கவாதம் என்பது நம்முடைய மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டாலோ அல்லது மூளையில் இடம் பெற்றிருக்கின்ற இரத்த நாளம் ஆனது கசிந்து உடைந்தோலோ ஏற்படுகிறது. இதோடு மட்டும் இல்லாமல் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவுடன் ஆக்ஜிசன் ஆனது மூளை திசுக்கள் செல்வதை தடுக்கிறது. இதுபோன்ற செயல்கள் ஏற்படும் போதும் நமக்கு பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதுவே மூளை பக்கவாதம் எனப்படும்.

மூளை பக்கவாத வகைகள்:

 1. Ischemic stroke
 2. Embolic stroke

மூளை பக்கவாதம் ஆனது இரண்டு வகைகளில் இருக்கிறது.

மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள்:

மூளை பக்கவாதம் அறிகுறிகள்

நம்முடைய உடலில் உள்ள உயர் கொழுப்புச் சத்து ஆனது இரத்த நாளங்களில் படிந்து அதில் காணப்படும் விட்டத்தினை குறுகள் அடையச் செய்கிறது. இத்தகைய செயலினால் நம்முடைய மூளைக்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவு குறைந்து விடுகிறது. இதுவே மூளையில் பக்க வாதம் ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக அமைகிறது.

சிறுநீர்ப்பை இறக்கம் அறிகுறிகள் பற்றி தெரியுமா 

மூளை பக்கவாதம் அறிகுறிகள்:

 • கடுமையான தலைவலி
 • பேசுவதில் சிரமம்
 • பார்க்கும் பார்வையில் தெளிவுயின்மை
 • வாந்தி மற்றும் குமட்டல்
 • மற்றவர்கள் பேசுவதை புரிந்துக்கொள்ளும் தன்மை இழப்பு
 • தலைசுற்றல்
 • உடலில் உள்ள உறுப்புகள் உணர்வு இல்லாமல் இருத்தல்
 • வழக்கத்திற்கு மாறான பழக்க வழக்கம்
 • நடப்பதில் சிரமம்
 • வலிப்பு வருதல்
 • திடீரென குழப்பம் கொள்தல்

மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் அனைத்தும் மூளை பக்கவாதத்திற்கான அறிகுறிகள் ஆகும். எனவே இதுபோன்ற அறிகுறிகள் நமக்கு வரும் போது உடனே மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையினை பெற்றால் மட்டுமே வரும் முன் காத்து ஆரோக்கியமான வாழ்க்கையினை வாழ இயலும்.

கருப்பை இறக்கம் இருப்பதை காட்டும் அறிகுறிகள் என்ன

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil