Breathing Problem Symptoms in Tamil
அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய ஆரோக்கியம் பதிவில் சுவாச பிரச்சனை இருந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய கால கட்டத்தில் 89% பேர் சுவாச பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். நாம் உயிர் வாழ்வதற்கு கட்டாயம் சுவாசிக்க வேண்டும். சுவாசம் என்பது நம் உடலில் நடக்கும் ஒரு செயலாகும். மாசு இல்லாத காற்றை நாம் சுவாசிக்க வேண்டும். ஆனால் நாம் சுத்தமான காற்றை சுவாசிப்பதில்லை. அதனால் பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் இந்த பாதிப்பு இருக்கிறது. அந்த வகையில் இன்று நாம் சுவாச பிரச்சனை இருந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
மூச்சு திணறல் அறிகுறிகள் |
சுவாச பிரச்சனை அறிகுறிகள்:
சுவாசம் என்பது நமது உயிரை காக்கும் கவசமாக இருக்கிறது. சுவாச பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அந்த காலத்தில் வயதானவர்களுக்கு மட்டும் தான் சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் இருந்தது.
ஆனால் இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த பாதிப்பு இருக்கிறது. அந்த வகையில் இந்த பிரச்சனை இருந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை பார்க்கலாம்.
அதிகமாக சுவாசிப்பது:
ஒருவருக்கு சுவாச பிரச்சனை இருந்தால் அவர்கள் வழக்கத்தை விட ஆழமாகவோ அல்லது குறைவாகவோ சுவாசிப்பார்கள்.
பொதுவாக ஒருவர் சுவாசிக்கும் நிமிடம் 12 முதல் 16 சுவாசங்கள் வரை இருக்கும். இதை தாண்டி ஒருவருக்கு சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் சுவாச பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.
அதே நேரம் நீங்கள் வழக்கத்தை விட அதிகமாக சுவாசிக்கும் போது மூச்சுத்திணறல், இதயத்துடிப்பு , பதற்றம் மற்றும் மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.
வாயின் மூலம் மூச்சு விடுவது:
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி பிடித்திருந்தால் வாயின் மூலம் மூச்சு விடுவார்கள். இதுவும் சுவாச பிரச்சனையின் அறிகுறி தான்.
மூக்கில் அடைப்பு ஏற்பட்டு மூச்சு விட சிரமமாக இருக்கும். மேலும், தூங்கும் போது குறட்டை விடுவது, அடிக்கடி கொட்டாவி விடுவது, உதடு மற்றும் வாய் வறண்டு ஈரப்பதம் இல்லாமல் இருப்பது இவை எல்லாம் சுவாச பிரச்சனை இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.
இந்த அறிகுறிகள் அனைத்தும் நீங்கள் அதிகமாக சுவாசிக்கிறீர்கள் என்பதை வெளிக்காட்டுகிறது.
மேலும், சுவாச பிரச்சனை ஒருவருக்கு இருந்தால் எவ்வித உடல் சம்மந்தமான அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |