கால்சியம் குறைபாடு அறிகுறிகள்
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதயம் மற்றும் தசைகளின் செயல்பாட்டிற்கு எலும்புகள் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. நமது உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அதனால் தான் நம் உடலில் கால்சியம் குறைந்து விட்டது என்பதை சில அறிகுறிகள் வைத்து கண்டுபிடித்து விடலாம். அதனால் இந்த பதிவில் கால்சியம் குறைபாட்டிற்கான அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
கால்சியம் குறைந்தற்கான அறிகுறிகள்:
கால்சியம் இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன
தசை பிடிப்பு:
கால்சியம் சத்து குறைவாக இருந்தால் உடல் வலி மற்றும் தசைகளில் வலி ஏற்படலாம். சில நேரங்களில் தூங்கும் போது தசைகளில் வலி ஏற்படும்.
உடல் சோர்வு:
உங்களுக்கு தலை சுற்றல் மற்றும் தூக்கமின்மை, உடல் எப்பொழுதும் அசதியாகவே இருக்கின்றது போன்றவை கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகளாகும்.
தோல் பிரச்சனை:
வறண்ட சருமம், தோல் எரிச்சல், நகம் அடிக்கடி உடைந்து கொண்டே போகிறது என்றால் கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகளாகும்.
ஆஸ்டியோபீனியா மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ்:
எலும்புகளில் வலி எலும்பு தேய்மானம் பிரச்சனை போன்றவை உடலில் கால்சியம் குறைவதனால் தான் ஏற்படுகிறது.
பல் பிரச்சனைகள்:
பற்களில் இரத்தம் வருதல், பல் சொத்தை, ஈறுகளில் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
எலும்பு பலம் பெற கால்சியம் அதிகம் உள்ள உணவு வகைகள்..!
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |