கார்டியாக் அரெஸ்ட் அறிகுறிகள்
நம் முன்னோர்களின் காலத்தில் உடலில் பிரச்சனைகள் ஏற்படாது. அப்படியே ஏற்பட்டாலும் அதற்காக ஆங்கில மருந்துகளை எடுத்து கொள்ளாமல் நாட்டு மருந்துகளை தான் எடுத்து கொண்டார்கள். மேலும் அவர்கள் ஆரோக்கியமான உணவுகளையும் எடுத்து கொண்டனர். ஆனால் இன்றைய கால கட்டத்தில் உணவுகளை சரியாக எடுத்து கொள்வதில்லை. நேரத்திற்கு உணவுகளை எடுத்து கொள்ளாமல் ஸ்னாக்ஸ்களை சாப்பிடுகின்றனர். தண்ணீரும் சரியாக குடிப்பதில்லை, இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. தொழில்நுட்பம் வளர்வது போல் நோய்களும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. நோய்களை முழுமையாக சரி செய்ய வேண்டுமென்றால் நோயை ஆரம்ப நிலையிலே அறிந்து கொள்ள வேண்டும். எப்படி ஆரம்ப நிலையிலே அறிந்து கொள்வது என்றால் ஒவ்வொரு நோயையும் சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம். அந்த வகையில் இன்றைய பதிவில் கார்டியாக் அரெஸ்ட் பிரச்சனைக்கான அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
What is Cardiac Arrest :
இதயம் வேலை செய்வதை நிறுத்தும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த தீவிர இதய நிலை எச்சரிக்கை இல்லாமல் ஏற்படலாம். மாரடைப்பின் போது இதயம் துடிப்பதை நிறுத்துகிறது மற்றும் மூளை மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கு இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது. இந்த நிலை பொதுவாக இதயத்தின் மின் அமைப்பில் ஏற்படும் பிரச்சனையால் ஏற்படுகிறது . கார்டியாக் அரெஸ்ட் இரத்த ஓட்டத்தை குறைத்து முழு உடலுக்கும் இரத்த ஓட்டம் இல்லாத ஒரு நிலைஏற்படும். மாரடைப்பு என்பது சில சமயங்களில் மிக விரைவாகவும் திடீரெனவும் ஏற்படலாம். இது நோயாளியை சுயநினைவை இழக்கச் செய்கிறது மற்றும் திடீர் மரணத்திற்கு கூட வழிவகுக்கும்.
Cardiac Arrest Symptoms in Tamil:
கார்டியாக் அரெஸ்ட் என்பது அறிகுறிகளுடனும் ஏற்படலாம், அறிகுறிகள் இல்லாமலும் ஏற்படலாம். அதனால் இந்த பதிவில் சில கார்டியாக் அரெஸ்ட் வருவதற்கு முன்பு என்னென்ன அறிகுறிகள் ஏற்படலாம் என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க..
ஆட்டோ இம்யூன் மயோசிடிஸ் நோய் அறிகுறி….
மூச்சு திணறல்
மயக்கம்
உடல் சோர்வு
இதயத்துடிப்பு வேகமாக துடிப்பது
வாந்தி
திடீரென்று கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டால் அறிகுறிகள்:
நெஞ்சு வலி
இதயத்துடிப்பு துடிக்காமல் இருப்பது
மூச்சு திணறல் அல்லது சுவாசிக்காமல் இருப்பது
மேல் கூறப்பட்டுள்ள அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
உங்க பிள்ளைகள் படிப்பில் மந்தமாக இருக்கிறார்களா.! அப்போ இதுவாக இருக்கலாம் என்னன்னு தெரிஞ்சுக்கோங்க..
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |