வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சிக்குன்குனியா நோயின் அறிகுறிகள்

Updated On: May 2, 2025 6:14 PM
Follow Us:
chikungunya symptoms in tamil
---Advertisement---
Advertisement

Chikungunya Symptoms in Tamil

நம் முன்னோர்களின் காலத்தில் ஆரோக்கியமான உணவை உட்கொண்டார்கள். அதனால் எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளாததால் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். சொல்லப்போனால் உணவை விட மாத்திரைகளை தான் அதிகமாக  உட்கொள்கின்றனர். நம் உடலில் பிரச்சனை வந்த பிறகு அதற்கு எந்த மருத்துவரிடம் காண்பிப்பது, என்று யோசிப்பதை விட, பிரச்சனை வருவதற்கு முன்னரே அதனை வராமல் தடுப்பது எப்படி என்று யோசிக்க வேண்டும். உடலில் பிரச்சனை இருந்தாலும் அதனை அசால்ட்டாக விட்டு விடுவார்கள். நோயானது நல்ல முற்றிய நிலை வந்த பிறகு தான் மருத்துவரிடம் செல்வார்கள். ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு அறிகுறிகள் இருக்கும், அதை தெரிந்து கொண்டாலே பிரச்சனையிலிருந்து விடுபடலாம். அந்த வகையில் இன்றைய பதவில் சிக்குன்குனியா நோய்க்கான அறிகுறிகள் பற்றி அறிந்து கொள்ளவோம்.

சிக்குன்குனியா என்றால் என்ன.?

சிக்குன்குனியா என்பது ஒரு வைரஸ் நோயாகும், இது பாதிக்கப்பட்ட கொசுக்களால் மனிதர்களுக்கு பரவுகிறது. இது சிக்குன்குனியா வைரஸால் ஏற்படுகிறது மற்றும் திடீர் காய்ச்சல் மற்றும் மூட்டு வலி ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது, இவை நம் உடலை கடுமையாக பலவீனப்படுத்தும்.

சிக்குன்குனியா அறிகுறிகள்:

சிக்குன்குனியா என்றால் என்ன

சிக்குன்குனியா கொசு கடிக்கப்பட்ட நாளிலிருந்து 3 முதல் 7 நாட்களில் வெளிப்படுகின்றன. இந்த நோயானது கொசுக்களால் பரவ கூடியது. அதனால் இவற்றின் சில அறிகுறிகளை அறிந்து கொள்வோம்.

ஒருவருக்கு திடீரென்று காய்ச்சலை ஏற்படுத்தலாம், இந்த காய்ச்சலானது 2 நாட்கள் வரைக்கும் இருக்க கூடும். இதோடு குளிர் நடுக்கத்தையும் ஏற்படுத்தலாம்.

மூட்டுகளில் வலி:

எப்பொழுதாவது மூட்டு வலி வேலையின் காரணமாக ஏற்படும். ஆனால் சிக்கன்குனியா பாதித்தவருக்கு ஒரு மாதம் வரைக்கும் மூடு வலி இருக்க கூடும்.

மேலும் தசை வலியும் இருக்க கூடும்.  மணிக்கட்டுகள், கைகள், கணுக்கால், தோள்கள் மற்றும் முழங்கால்களில் போன்ற பகுதிகளில் வலிகள் ஏற்படும். பாதிக்கப்பட்ட நபருக்கு சற்று வீங்கிய மூட்டுகள் மற்றும் தசைநார் வீக்கம் இருக்கலாம்.

கண்களானது சிவந்த நிறத்தில் காணப்படும். மேலு தலைவலி பிரச்சனை இருக்க கூடும்.

மற்ற அறிகுறிகள்:

தலைவலி

குமட்டல் மற்றும் வாந்தி

முதுகு வலி

உடல் சோர்வு

அரிப்பு ஏற்படுதல்

சிக்குன்குனியா வரமால் தடுப்பது:

  • உடலை முழுமையாக மூடும் ஆடைகள் பயன்படுத்த வேண்டும்.
  • முடிந்தவரை அதிக நேரத்தை வீட்டிற்குள் செலவிட வேண்டும். வெளியே உட்காருவதை தவிர்க்க வேண்டும்.
  • தொற்றுநோய்கள் ஏற்படும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்த்தல்
  • எலுமிச்சை யூகலிப்டஸ் எண்ணெயை உள்ளடக்கிய தயாரிப்புகளைப் பயன்படுத்துவது நன்மை பயக்கும்
  • காற்றுச்சீரமைப்பியை இயக்குதல் – இது கொசுக்களை வீட்டிற்கு வெளியே வைக்கிறது
  • கொசு வலையில் உறங்க வேண்டும்.
  • சாக்கடைகள், மழைக் கால்வாய்கள், குவளைகள், பானை செடிகள் மற்றும் அவற்றின் அடியில் உள்ள சாஸர்களில் இருந்து நீரை வெளியேற்றுதல்
  • குடியிருப்பு தண்ணீர் தொட்டிகள் அல்லது நீர்த்தேக்கங்கள் உட்பட, காலி செய்ய முடியாத தண்ணீர் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும்.
  • பிளாஸ்டிக் பைகள் போன்ற மூடிய கொள்கலன்களில் குப்பைகளை சேமிக்க வேண்டும். வெளியே கண்டா இடத்தில் குப்பைகளை சேமித்தால் கொசுக்கள் உற்பத்தியாகும்.

குழந்தைகளுக்கு டெங்கு அறிகுறிகள்

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Liver Cancer Symptoms in Tamil

கல்லீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

vitamin d deficiency symptoms in tamil

உடம்பில் ஏற்படும் வைட்டமின் டி குறைபாட்டிற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா..?

Symptoms of Salt Deficiency in Tamil

உப்பு சத்து குறைந்தால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும்..?

Chicken Pox Symptoms in Tamil

சின்னம்மை (சிக்கன் பாக்ஸ்) அறிகுறிகள் | Chicken Pox Symptoms in Tamil

fistula symptoms in tamil

பிஸ்துலா என்றால் என்ன.. அதன் அறிகுறிகள்..

aan pen kulanthai arikurigal

கருவில் இருக்கும் குழந்தை ஆணா,பெண்ணா என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்

Tonsils Symptoms in Tamil

தொண்டையில் சதை வளர்ச்சி இருந்தால் என்ன அறிகுறிகள் ஏற்படும்..?

Symptoms of Typhoid in Tamil

டைபாய்டு காய்ச்சல் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

Gerd Symptoms in Tamil

உணவு குழாயில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..!