இப்படியெல்லாம் செய்தால் உங்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் பிடிக்க போகிறது..

Advertisement

சளி காய்ச்சல் அறிகுறிகள்

நம் முன்னோர்களின் காலத்தில் உணவே மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் மருந்தே உணவு என்றாகிவிட்டது. நோய் வந்த பிறகு அதற்கான சிகிச்சை செய்வதை விட நோய் வருவதற்கு முன்பே அறிந்து கொண்டால் நோயை சரி செய்வதற்க்கு எளிமையாக இருக்கும். அதற்கு முதலில் ஒவ்வொரு நோய்க்கும் உள்ள அறிகுறிகளை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் சளி காய்ச்சல் பிரச்சனைக்கான அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

Cold Fever Symptoms in Tamil:

சளி அறிகுறிகள்:

சளி அறிகுறிகள்

நம்மில் பலருக்கும் சளி காய்ச்சல் வர போகின்றது என்றால் உடல் சோர்வுடையும், தும்மி கொண்டே இருப்போம், மூக்கில் நீர் வடியும் இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் சளி பிடிக்க போகிறது என்று அறிந்து கொள்வோம். ஆனால் இதுமட்டுமில்லை சளி பிடிப்பதற்கான அறிகுறிகள், வேறு அறிகுறிகளும் உள்ளது அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

  • மூக்கிலிருந்து தண்ணீராக வரும் இல்லையென்றால் மூக்கில் அடைப்பு ஏற்படும்.
  • தொண்டையில் புண் அல்லது அரிப்பு ஏற்படும்.
  • வறட்டு இருமல்
  • தும்மல்
  • லேசான உடல் வலி அல்லது தலைவலி பிரச்சனை ஏற்படும் .

மூச்சு விடும் போது வலிக்குதா  அதுக்கு என்ன காரணம் தெரியுமா

குழந்தைகளுக்கு சளி அறிகுறிகள்:

குழந்தைகளுக்கு சளி அறிகுறிகள்

  • மூக்கு ஒழுகுதல்
  • தும்மல்
  • காய்ச்சல்
  • பசியின்மை
  • தொண்டை புண் அல்லது எச்சில் விழுங்குவதில் சிரமம்
  • வறட்டு இருமல்
  • தொண்டையில் எரிச்சல் உணர்வு

முதலில் மூக்கில் தெளிவாக நீர் கசியும் அதன் பிறகு மஞ்சள் நிறத்தில் நீர் வடியும் அதன் பிறகு மூச்சு பிரச்சனை ஏற்படும். இது அனைத்தும் சளி பிடிப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

காய்ச்சல் அறிகுறிகள்:

காய்ச்சல் அறிகுறிகள்

  • அதிகமாக வியர்த்தல்
  • குளிர் மற்றும் நடுக்கம்
  • உடல் சோர்வு
  • பசியின்மை
  • உடல் வலி
  • தண்ணீர் தாகம் அடிக்காமல் இருப்பது

மூச்சுத்திணறல் ஏற்பட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil

 

 

Advertisement