மலக்குடல் புற்றுநோய் அறிகுறிகள்

Colorectal Cancer Symptoms in Tamil

மலக்குடல் நோய் அறிகுறிகள் | Colorectal Cancer Symptoms in Tamil

புற்றுநோய் என்பதை ஒரு கால கட்டத்தில் நாம் சினிமாவில் தான் பார்த்திருப்போம். ஆனால் தற்பொழுது நிறைய வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த புற்றுநோய்களில் ஒன்று தான் மலக்குடல் புற்றுநோய். ஆசனவாய்க்கு சற்று உள்ளே இருக்கும் குடல் தான் மலக்குடல். இது பெருங்குடலின் கடைசி பகுதியில் அமைந்துள்ளது. புற்றுநோய் பெரும்பாலும் தாக்குவது இந்த மலக்குடலை தான். இந்த மலக்குடல் புற்றுநோய் வருவதற்கு காரணம் பல இருந்தாலும், முக்கியமாக பார்க்க வேண்டியது உணவு முறைகளை தான்.

அதிகமான கார உணவுகள், அதிக கொழுப்புச்சத்து உள்ள உணவுகள், நார்ச்சத்து இல்லாத உணவுகள், வைட்டமின் மற்றும் தாதுக்கள் இல்லாத உணவுகளை எடுத்துக்கொளவது, என்று பல உணவு முறை காரணமாக இந்த மலக்குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வருகிறது. பொதுவாக புற்றுநோயின் ஆரம்பகால நிலையை கண்டறிவது என்பது கொஞ்சம் கடினம். இருந்தாலும் ஒரு சில அறிகுறிகளை வைத்து மலக்குடல் புற்று நோயா என்று நாம் சோதித்து பார்க்க முடியும். அந்த அறிகுறிகளை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள்

மலக்குடல் புற்றுநோய் அறிகுறிகள் – Symptoms Colorectal Cancer in Tamil:

Colorectal Cancer

மலம் கழிக்கும் போது இரத்தம் வந்தால் அது மலக்குடல் புற்றுநோயாகவும் இருக்கலாம். இந்த அறிகுறி உங்களுக்கு இருந்தால் அதனை அலட்சியமாக விடாமல்  உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது.

மலத்திலே இரத்தம் கலந்து வந்தால் அதுவும் மலக்குடல் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

தொடர்ந்து குமட்டல் அல்லது வாந்தி பிரச்சனை இருந்தாலும் அது மலக்குடல் புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம்.

தொடர்ந்து மலச்சிக்கல்  பிரச்சனை இருப்பது.

தொடர்ச்சியான அடிவயிற்றில் வலி ஏற்படுவது.

மலம் கழித்த பின் ஒரு விதமான வலி.

மலத்தை அடக்க முடியாது நிலை அல்லது திடிரென்று தொடர்ச்சியாக மலம் கழிப்பது.

சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணம் ஆகாமல் உடனே மலம் கழிப்பது.

மலம் தண்ணீர் போன்று வருவது இவையெல்லாம் மலக்குடல் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறியாகும்.

மேல் கூறப்பட்டுள்ள எந்த அறிகுறிகளாக இருந்தாலும் சரி அந்த அறிகுறி உங்களுக்கு தொடர்ச்சியாக இருக்கிறது என்றால் கண்டிப்பாக மருத்துவரை அணுகி அதற்கான பரிசோதனையை செய்துகொள்ளுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
புற்றுநோய் செல்களை வளர விடாமல் அழிக்கும் ஜூஸ் எது..?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்