தலையில் பொடுகு இருந்தால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும்..?

Advertisement

Dandruff Symptoms in Tamil

தினமும் ஒரு பயனுள்ள தகவலை பற்றி நம் பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவின் வாயிலாக பொடுகு அறிகுறிகள் பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக பொடுகு என்பது நம் அனைவருக்குமே தலையில் வரக்கூடிய ஒரு பிரச்சனை ஆகும். அதுமட்டுமில்லாமல், பொடுகு பிரச்சனையை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்ற பல பயனுள்ள குறிப்புகளை நம் பதிவின் வாயிலாக பதிவிட்டுள்ளோம். அதனை படித்து பயன்பெறவும். சரி வாங்க பிரண்ட்ஸ்..! பொடுகின் அறிகுறிகள் என்ன என்று தெரிந்து கொள்வோம்.

பொடுகு தொல்லை நீங்க இயற்கை வழிகள்

பொடுகு வர காரணம்..? 

பொடுகு என்பது ஒரு பொதுவான முடி பிரச்சனையாகும். இது ஆண்கள் பெண்கள் என்று அனைவருமே சந்திக்கக்கூடிய பிரச்சனை தான். இது உச்சந்தலையில் செதில்கள் மற்றும்  அரிப்பை ஏற்படுத்துகிறது.

உச்சந்தலையில் உள்ள இறந்த செல்கள் மேற்பரப்பில் அதாவது உச்சந்தலையில் எண்ணெய் காரணமாக ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டிருக்கும். இது உச்சந்தலையில் அரிப்புடன் செதில்களாகவும், முடி சாதாரண விகிதத்தை விட வேகமாக உதிர்வதற்கும் வழிவகுக்கிறது.

பொதுவக நாம் செய்யும் தவறுகளால் தான் பொடுகு வருகிறது. அது என்னென்ன என்று இப்போது காண்போம். வறட்சியான சருமத்தினால் பொடுகு வருகிறது.

100% பொடுகு நீங்க எளிய வழிகள்

  • தலைக்கு குளித்துவிட்டு தலையை துவட்டாமல் இருப்பது. இதன் காரணமாக தண்ணீர் மற்றும் சோப்பு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடுகிறது. இதனால் பொடுகு உற்பத்தியாகிறது.
  • எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பதாலும் பொடுகு உருவாகிறது.
  • அழுக்கு தலையுடன் இருந்தாலும் பொடுகு உருவாகும்.
  • தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணீர் தலையில் தங்கி விடுகிறது. இதன் காரணமாகவும் பொடுகு வர வாய்ப்புள்ளது.
  • “பிடி ரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணியிர் கிருமியினாலும் இந்த பொடுகு பிரச்சனை வருகிறது.
  • எக்ஸீமா (Eczema), சொரியாஸிஸ் (Psoriasis) போன்ற தோல் நோய்களாளும் பொடுகு பிரச்சனை வருகிறது.
  • அதிகமாக ஷாம்பு பயன்படுத்தினாலும் பொடுகு பிரச்சனை வரலாம்.
  • மன அழுத்தம் மற்றும் கவலையாலும் இந்த பொடுகு பிரச்சனை வரலாம்.

பொடுகு பிரச்சனை அதிகம் இருக்கிறதா.. அப்போ இதை ட்ரை பண்ணுங்க

பொடுகு அறிகுறிகள்:

ஒருவருக்கு பொடுகு பிரச்சனை இருப்பதை சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

  • உச்சந்தலையில் வெள்ளை முதல் மஞ்சள் நிற செதில்கள் காணப்படும்.
  • உச்சந்தலையில் அதிகப்படியான அரிப்பு இருக்கும்.
  • உச்சந்தலையில்  உலர்ந்த அல்லது எண்ணெய் நிறைந்தது போல பிசுபிசுப்பு தன்மையுடன் இருக்கும்.
  • உச்சந்தலையில் சிவத்தல் அல்லது வீங்கிய கொப்பளங்கள் காணப்படும்.
  • காலப்போக்கில் மோசமான செதில்கள் காணப்படும்.
  • காதின் பின் புறம் செதில் செதில்களாக இருக்கும்.
  • முகத்தில் பருக்கள் வருவதற்கும் பொடுகு காரணமாக இருக்கும்.
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement