நீரிழப்பு அறிகுறிகள்
நீங்கள் உணவை மட்டும் சரியாக மூன்று வேலை சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீரிழப்பு பிரச்சனை ஏற்படும். உடலில் நீரிழப்பு பிரச்சனை ஏற்பட்டால் நீங்கள் சோர்ந்து புகுவீர்கள். அதனால் இந்த பதிவில் நீரிழப்பு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என்பதனை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம். இந்த பிரச்சனை மட்டுமில்லை நம் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைக்கும் அறிகுறிகள் தோன்றும். அந்த அறிகுறிகள் எல்லாம் நமக்கு தெரிந்து விட்டால் பிரச்சனையை சரி செய்வதற்க்கு ஈஸியாக இருக்கும். அதாவது ஆரம்ப நிலையிலே நோயின் அறிகுறி தெரிந்து விட்டால் சரி செய்வது ஈஸியாக இருக்கும்.
குழந்தைகளின் நீரிழப்பிற்கான அறிகுறிகள்:
- குழி விழுந்த கண்கள்
- சிறுநீர் கழித்தல் குறைந்தது
- கண்ணீர் வராமல் இருப்பது
- உலர்ந்த, ஒட்டும் சளி சவ்வுகள்
- சோர்வு
- எரிச்சல்
பெரியவர்களுக்கு நீரிழப்பிற்கான அறிகுறிகள்:
- அதிக தாகம் எடுப்பது
- வாய் வறண்டு காணப்படுதல்
- சோர்வு
- அதிகம் தூக்கம்
- சிறுநீர் குறைவாக கழிப்பது
- மஞ்சள் கலந்த சிறுநீர்
- துர்நாற்றம் வீசும் சிறுநீர்
- தலைவலி
- தோல் உலர்ந்தது
- மயக்கம்
மயக்கம் வருவதற்கான அறிகுறிகள்..! | Symptoms of Fainting in Tamil
நீரிழப்பு பிரச்சனை அதிகமாகிவிட்டது என்பதை காட்டும் அறிகுறிகள்:
- சிறுநீர் வராமல் இருப்பது
- அடர் மஞ்சள் அல்லது அம்பர் நிற சிறுநீர்
- நிலையற்ற தன்மை
- மயக்கம்
- இரத்த அழுத்தம் குறையும்
- இதயத் துடிப்பு அதிகரிக்கிறது
- காய்ச்சல்
- மோசமான தோல் நெகிழ்ச்சி
- சோர்வு
நீரிழவு பிரச்சனை விரைவாக வருவதை காட்டும் அறிகுறிகள்:
காய்ச்சல்
அதிகப்படியான உடற்பயிற்சி
வாந்தி
வயிற்றுப்போக்கு
தொற்று
நீரிழிவு நோய்
தீக்காயங்கள் போன்ற தோலில் குறிப்பிடத்தக்க காயங்கள்
கடுமையான தோல் நோய்கள்
மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்:
வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டு நாட்களுக்கு மேல் இருந்தாலும், காய்ச்சல் 101 டிக்ரீக்கு மேல் இருந்தாலும், மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலும் மருத்துவரை அணுக வேண்டும்.
இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள் என்ன?
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |