Dementia Symptoms in Tamil
டிமென்சியா ஒரு நீண்டகால மன நோய் ஆகும். மறதிநோய் அல்லது Dementia என்பது நினைவு, சிந்தனை, நடத்தையில் ஏற்படும் சீர்குலைவாகும். இதன் காரணமாக ஒருவரின் ஞாபகம், மொழித்திறன், காட்சிப் புலனுணர்வு, பிரச்சனை தீர்கும் திறன், சுய மேலாண்மை, கவனக்குவிப்பு, கவனம் செலுத்தல் போன்ற தொழிற்பாடுகளில் குறைபாடு ஏற்படும். இது எந்த வயதினரையும் பாதிக்கக்கூடியது. அதாவது உலக அளவில் 50 மில்லியன் மனிதர்களுக்கு இந்த நோய் இருப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டிற்கும் 10 மில்லியன் பேருக்கு இந்த நோய் ஏற்படுவதாகவும் பல ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றது. மேலும் அல்சைமர் நோயே இந்நிலைக்கான முதன்மைக் காரணியாக உள்ளது. அதாவது 60-70% மானோருக்கான அல்சைமர் நோய் தான் மறதிநோய்கான முதன்மைக் காரணியாக உள்ளது. இந்த மறதிநோய்யால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களைப் பராமரிப்போர், குடும்பத்தினர், சமூகத்தினர் அனைவருக்கும் உடல், உள, சமூக, பொருளாதாரப் பிரச்சனைகளை சந்திக்கின்றார்கள். இதற்கான சிகிச்சைகளும் இன்னும் கண்டறியப்படவில்லை. அதனால் இந்த நோயினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அதன் தாக்கத்தை குறைக்கலாம். அதற்கு முதலில் நமக்கு இந்த நோயிக்கான அறிகுறிகள் தெரிந்திருக்க வேண்டும். எனவே தான் இந்த பதிவில் மறதிநோய் அல்லது Dementia என்ற நோய்க்கான அறிகுறிகளை அறிந்து கொள்வோம் வாங்க
ஆளுமை சீதைவுக்கான அறிகுறிகள் என்ன தெரியுமா
Symptoms of Dementia in Tamil:
இந்த மறதிநோயிக்கான அறிகுறிகளை தெரிந்து கொண்டால் மட்டுமே நமது நண்பர்களோ அல்லது உறவினர்களோ இதனால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு உதவி செய்யமுடியும்.
அவை என்னென்ன அறிகுறிகள் என்பதை இங்கு விரிவாக காணலாம் வாங்க.
தெரிந்த நபர்களின் பெயர், வாழ்விடம் மறந்து போதல்.
ஆரம்பத்தில் அண்மைக்கால சம்பவங்களே மறக்கும். காலம் செல்லச் செல்ல பழைய சம்பவங்களும் மறந்து போகும்.
வயது மறந்து போகும்.
சொற்கள் மறந்து போகும்.
புதிய மனிதர்கள் அல்லது புதிய சூழலை சந்திக்கும்போது குழப்பம் ஏற்படும்.
நடத்தையில் மாற்றங்கள் ஏற்படும். அதாவது அடிக்கடி கோபப்படல், பொருத்தமற்ற பாலியல் வெளிப்பாடுகள், தனிநல சுகாதார பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க தவறுதல்.
புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்படல்.
இந்தெந்த அறிகுறிகள் இருந்தா அது தொழுநோயாம் அது என்னென்ன அறிகுறிகள் என்று தெரிந்து கொள்ளுங்க
Narcissist என்றால் என்ன தெரியுமா
விழித்திரையில் புற்றுநோய் ஏற்பட்டால் இந்த அறிகுறிகள் தான் இருக்குமா
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |