குழந்தைகளுக்கு டெங்கு அறிகுறிகள் | Dengue Fever Symptoms in Tamil for Child..!
நாம் அனைவருக்கும் சாதாரணமாக காய்ச்சல் என்பது வரும். இவ்வாறு நாம் காய்ச்சல் ஓரிரு நாட்களிலேயே சரியாகிவிடும். ஒருவேளை அப்படி சரியாகத பட்சத்தில் வேறு ஏதாவது காய்ச்சலாக இருக்குமோ என்ற சந்தேகத்தினால் அதற்கு உரிய டெஸ்டுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது இயல்பான ஒன்று. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நமது உடம்பில் வரும் ஒவ்வொரு காய்ச்சலுக்கு அறிகுறிகள் என்பது தோன்றும். அதேபோல் டெங்கு காய்ச்சலுக்கு என்றும் தனியாக அறிகுறிகள் ஆனது காணப்படுகிறது. ஆகவே ஒன்று குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதற்கான அறிகுறிகள் என்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க..!
டெங்கு காய்ச்சல் என்றால் என்ன..?
டெங்கு காய்ச்சல் என்பது நமக்கு உடம்பில் வரும் சாதாரணமான காய்ச்சலை போல் இல்லாமல் அதனை விட தீவிரமான தன்மை உடையது. இத்தகைய டெங்கு காய்ச்சல் ஆனது கொசுக்களினால் ஏற்படும் காய்ச்சல் ஆகும். இதுவே டெங்கு காய்ச்சல் எனப்படும். மேலும் இந்த காய்ச்சல் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு காய்ச்சலையும் பரப்புகிறது.
குழந்தைகளுக்கு டெங்கு அறிகுறிகள்:
- தசை வலி
- கடுமையான தலைவலி
- குமட்டல்
- கண்களுக்கு பின்னால் வலி
- தோல்களில் வெடிப்பு
- உடல் வெப்பநிலையில் திடீர் உயர்வு
- மூக்கு மற்றும் ஈறுகளில் இருந்து இரத்தக்கசிவு
- எலும்புகளில் வலி
மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் ஆனது பெரும்பாலும் உடனே தெரிவது இல்லை. அதாவது குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதற்கான இத்தகைய அறிகுறிகள் ஆனது 3 முதல் 10 அல்லது 6 முதல் 7 நாட்களுக்குள் தோன்றுகிறது.
ஆகவே இத்தகைய அறிகுறிகள் எது இருந்தாலும் அதனை உடனே மருத்துவரிடம் கூறி அதற்கான சிகிச்சை பெறுவது நல்லது.
டெங்கு காய்ச்சல் தடுப்பு முறைகள்:
- வீடு மற்றும் சுற்று புறங்களில் தண்ணீர் தேங்கி இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
- வீட்டிலும், வீட்டை சுற்றிலும் கொசுக்கள் இல்லாமல் பார்த்துக்கொள்வது.
- கை மற்றும் கால்களை மறைக்கும் அளவிற்கு குழந்தைகளுக்கு உடை அணிவது.
- மாலை மற்றும் அதிகாலை பொழுதில் ஜன்னல் மற்றும் கதவை மூடி வைத்தல்.
- தேங்காய் மட்டை, பழைய டயர் மற்றும் உடைந்த வாளிகள் என இவற்றில் எல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கலாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேலே சொல்லப்பட்டுள்ள தடுப்பு முறைகளை செய்வதன் மூலம் டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்கலாம்.
கருப்பை இறக்கம் இருப்பதை காட்டும் அறிகுறிகள் என்ன
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |