Dyslexia Symptoms in Tamil
டிஸ்லெக்ஸியா என்பது கற்றல் தொடர்பாக ஏற்படும் ஒரு நோயாகும். இதனால் பேசும் ஒலிகளை அடையாளம் காணுவதில் சிக்கல், உச்சரிப்பு சிக்கல்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதனை வாசிப்பு இயலாமை என்றும் கூறலாம். டிஸ்லெக்ஸியா மூளையில் உள்ள மொழிகளை புரிந்துகொள்ளும் அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் இந்த பதிவில் டிஸ்லெக்ஸியா பாதிப்பின் அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
டிஸ்லெக்ஸியா ஏற்பட காரணம்:
இது மரபணுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதனால்தான் இந்த நிலை பெரும்பாலும் குடும்பங்களில் இயங்குகிறது. உங்கள் பெற்றோர், உடன்பிறந்தவர்கள் அல்லது பிற குடும்ப உறுப்பினர்களுக்கு டிஸ்லெக்ஸியா இருந்தால், உங்களுக்கு டிஸ்லெக்ஸியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் குழந்தை கருவில் இருக்கும் போது தாய் சத்தான உணவுகளை உட்கொள்ளாமல் இருந்தாலும் இந்த பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
பள்ளி சேர்ப்பதற்கு முன் டிஸ்லெக்ஸியா நோயின் அறிகுறிகள்:
குழந்தைகள் தாமதமாக பேசுவது, புதிய வார்த்தைகளை பேசுவதற்கு அதிக நேரம் எடுத்து கொள்வார்கள். வார்த்தைகளில் வரும் ஒலிகளை மாற்றி பேசுதல், ஒரே மாதிரியாக ஒலிக்கும் வார்த்தைகளை பேசுவதில் குழம்பி விடுவார்கள்.
எழுத்துக்கள், எண்கள், நிறம் போன்றவற்றின் பெயர்களை ஞாபகம் வைத்து கொள்வதற்கு கஷ்டப்படுவார்கள்.
ரைம்ஸ் சொல்வதற்கு கஷ்டப்படுவார்கள்.
இரவு நேரத்தில் தாமதமாக தூங்குவதால் இதய நோய் ஏற்படுமா..! |
பள்ளி செல்லும் குழந்தைகளின் டிஸ்லெக்ஸியா நோயின் அறிகுறிகள்:
பள்ளி செல்லும் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப படிக்காமல் குறைவாக படிப்பார்கள்.
மற்றவர்கள் சொல்லி கொடுப்பது புரிந்து கொள்ளாமல் இருப்பது, கேள்விக்கான பதில் தெரியாமல் இருப்பது, வாசிப்பதில் சிரமம், ஒரு வார்த்தைக்கும், மற்றொரு வார்த்தைக்கும் என்ன வித்தியாசம் என்று அறியாமல் இருப்பது. எழுத்து பிழை, போன்றவை டிஸ்லெக்ஸியா நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.
இளைஞர்கள் மற்றும் பெரியவர்களின் டிஸ்லெக்ஸியா நோயின் அறிகுறிகள்:
வாசிப்பதில் சிரமம், எழுத்து பிழை ஏற்படுவது, வார்த்தைகளை சரியாக உச்சரிக்க முடியாமல் இருப்பது, ஒரு விஷயத்தை சுருக்கமாக சொல்லி கொடுப்பதில் சிரமம், மற்ற மொழிகளை கற்று கொள்வதில் சிரமம் போன்றவை டிஸ்லெக்ஸியா பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கிறது.
இந்த அறிகுறிகள் இருக்கா.. அப்போ இரத்த உறைவாக தான் இருக்கும்
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |