வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஆரம்பகால கர்ப்ப அறிகுறிகள்..! | Early Pregnancy Symptoms in Tamil

Updated On: June 12, 2025 6:20 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

ஆரம்பகால கர்ப்ப அறிகுறிகள்..! | Early Pregnancy Symptoms in Tamil

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒரு தருணம். ஏனென்றால் திருமணம் முடிந்த பிறகு தான் ஒரு பெண்ணிற்கு அனைத்து விதமான பொறுப்புகளும் அதிகரிக்க செய்கிறது. இவ்வாறு இருக்கையில் திருமணம் ஆன சில நாட்களில் அனைவரும் கேட்கும் ஒரு கேள்வி எதுவும் மகிழ்ச்சியான செய்து இருக்கிறதா என்று மறைமுகமாக கர்ப்பமாக இருப்பதை கேட்கும் ஒரு வழக்கம் ஆகும். திருமணம் ஆன பெண்களை பொறுத்தவரை கர்ப்பம் என்பது சில பெண்களுக்கு உடனே இருக்கும், மற்ற சில பெண்களுக்கு சில மாதம், வருடம் என நாட்கள் தள்ளி போகலாம், இப்படி இருக்கும் பட்சத்தில் சில பெண்களுக்கு தான் கர்ப்பமாக இருப்பது கூட தெரியாமல் போய் விடுகிறது. அதற்கான சில அறிகுறிகள் இருந்தாலும் கூட அது கர்பத்திற்கான அறிகுறிகள் தான் என்று தெரிவது இல்லை. ஆகையால் இன்றைய பதிவில் பெண்கள் கர்ப்பமாக இருப்பதை உணர்த்தும் ஆரம்பல கால அறிகுறிகள் என்னென்ன என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

கர்ப்பத்தின் ஆரம்ப கால அறிகுறிகள்:

  1. நெஞ்சு எரிச்சல்
  2. வீக்கம்
  3. மலச்சிக்கல்
  4. குமட்டல்
  5. உடல் சோர்வு
  6. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  7. தசைப்பிடிப்பு
  8. மார்பகத்தில் மாற்றங்கள்
  9. வயிறு பிடிப்பு
  10. அதிக வாசனை உணர்வு

குமட்டல்:

 

ஒரு பெண் கர்ப்பம் அடைந்த 4 முதல் 6 மாதங்களில் குமட்டல் அறிகுறி தொடங்குகிறது. அதாவது கர்ப்பம் அடைந்த முதல் வாரங்களில் அடிக்கடி குமட்டல் போன்ற உணர்வு தோன்றும். அதே 4 வாரங்கள் வந்தவுடன் குமட்டலுடன் கூடிய வாந்தியும் ஏற்படும். இது ஆரம்ப கால கர்ப்ப அறிகுறிகளில் ஒன்றாகும்.

தசைப்பிடிப்பு அறிகுறிகள்:

 

பொதுவாக பெண்களில் சிலருக்கு மாதவிடாய் வராத போது தசை பிடிப்பு பிரச்சனை இருக்கும். பின்பு சில நாட்களில்  மாதவிடாய் வந்து விடும். அதுவே கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணிற்கு முதல் 4 முதல் 6 வாரங்களில் தசை பிடிப்பு பிரச்சனை ஆனது லேசாக அல்லது கடுமையாக இருக்கிறது. ஆகையால் இத்தகைய அறிகுறியினை அலட்சிய படுத்தக்கூடாது. ஏனென்றால் இதுவும் கர்பத்திற்கான ஆரம்ப கால அறிகுறிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

உடல் சோர்வு:

 

ஆரம்ப கால கர்ப்பத்தின் போது ஒரு பெண்ணிற்கு அளவுக்கு அதிகமான சோர்வு தன்மையானது ஹார்மோன்கள் சுரப்பதன் காரணமாக ஏற்படுகிறது. அதுவும் இத்தகைய அறிமுறையானது ஒரு பெண் கர்ப்பம் அடைந்த 4 முதல் 6 வாரங்களில் இருந்தே தொடர்கிறது.

கர்ப்பத்தின் போது கால் வீக்கம் குறைய என்ன செய்யலாம்..

வழக்கத்திற்கு மாறாக சிறுநீர் கழித்தல்:

 

சிறுநீர் கழித்தல் என்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் கூட கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணிற்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் முறை ஏற்படுகிறது. அதாவது ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது உடலில் அதிகப்படியான திரவம் சுரக்கப்டுகிறது. இதன் காரணமாக 4 முதல் 6 வாரங்களில் இருந்து அடிக்கடி சிறுநீர் கழிக்கும் முறை ஏற்படுகிறது. இதுவும் ஆரம்ப கால கர்ப்ப அறிகுறிகளில் அடங்கும்.

கர்ப்ப காலத்தில் மார்பக மாற்றங்கள்:

 

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு முதல் 4 to 6 வாரங்களில் மார்பகத்தில் மாற்றங்கள் ஏற்படும். ஏனென்றால் புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஒரு கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் அதிக அளவு காணப்படுகிறது. இதன் காரணமாக கர்ப்பமாக இருக்கும் ஆரம்ப காலத்தில் மார்பகம் ஆனது மென்மையாக, நிறமாற்றம் மற்றும் லேசான வலி என சில மாற்றங்களுடன் காணப்படுகிறது.

மலச்சிக்கல்:

 

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது நம்முடைய உடல் ஆனது நிறைய ஹார்மோன்களை வெளியிடுகிறது. இத்தகைய ஹார்மோன்கள் அனைத்தும் நம்முடைய உடலில் செரிமான கோளாறு பிரச்சனையினை வழிவகுத்து மலச்சிக்கல் மற்றும் வீக்கம் போன்ற அறிகுறிகளை ஆரம்ப கால கர்ப்பத்தின் அறிகுறிகளாக காட்டுகிறது.

தலைவலி:

பொதுவான மாதவிடாய் முன் அறிகுறி. கருத்தரித்தவுடன் ஈஸ்ட்ரோஜன் மற்ரும் புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன்கள் குழந்தைக்கு கருப்பையை தயாரிக்க அதிக வேலை செய்கின்றன. இதனால் இவை இரத்த சர்க்கரை அளவை குறைத்து தலைவலியை உண்டு செய்கின்றன.

அதிக தாகம்:

எப்போதும் இருப்பதாய் விட அதிகமான தாகம் ஏற்படலாம். எப்போதும் பசி அதிகமாக இருக்கக்கூடும். சிறுநீர் கழிக்கும் போது கூச்ச உணர்வு இருக்கும். யோனியை சுற்றி அரிப்பு காணப்படும்.

மூச்சுத்திணறல் கர்ப்பத்தின் ஆரம்பகால அறிகுறியாக இருக்கிறது. ஏனென்றால் இரண்டு உயிருக்கும் சுவாசிக்க உடலுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இவை கர்ப்பத்தின் மூன்றாவது மாதத்தில் இருந்து ஆரம்பிக்கலாம்.

மாதவிலக்கு முன் அறிகுறிகள்

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Liver Cancer Symptoms in Tamil

கல்லீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

vitamin d deficiency symptoms in tamil

உடம்பில் ஏற்படும் வைட்டமின் டி குறைபாட்டிற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா..?

Symptoms of Salt Deficiency in Tamil

உப்பு சத்து குறைந்தால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும்..?

Chicken Pox Symptoms in Tamil

சின்னம்மை (சிக்கன் பாக்ஸ்) அறிகுறிகள் | Chicken Pox Symptoms in Tamil

fistula symptoms in tamil

பிஸ்துலா என்றால் என்ன.. அதன் அறிகுறிகள்..

aan pen kulanthai arikurigal

கருவில் இருக்கும் குழந்தை ஆணா,பெண்ணா என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்

Tonsils Symptoms in Tamil

தொண்டையில் சதை வளர்ச்சி இருந்தால் என்ன அறிகுறிகள் ஏற்படும்..?

Symptoms of Typhoid in Tamil

டைபாய்டு காய்ச்சல் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

Gerd Symptoms in Tamil

உணவு குழாயில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..!