Eye Nerve Damage Symptoms in Tamil
மனிதனாக பிறந்த அனைவருக்கும் கண் என்பது எவ்வளவு முக்கியமான உறுப்பு என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் இன்றைய கால கட்டத்தில் அனைவரும் மொபைல் போன் மற்றும் கணினி போன்றவற்றை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். அதனால் நமது கண்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அப்படி ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்றான கண் நரம்பு பாதிப்பினால் ஒருவரால் தனது கண் பார்வையை கூட இலக்க நேரிடும். மேலும் இந்த பாதிப்பினை முற்றிலும் போக்குவதற்கான சிகிச்சை எதுவும் இல்லை. ஏனென்றால் இது கண்ணில் இருந்து மூளைக்கு செல்லும் நரம்புகளை பாதிக்கிறது.
ஆனால் இந்த கண் நரம்பு பாதிப்பினை ஆரம்ப நிலையிலே கணடறிந்தால் அதன் தீவிரத்தை குறைக்கலாம். ஆனால் அதற்கு முதலில் நாம் அனைவருக்கும் இந்த கண் நரம்பு பாதிப்பிற்கான அறிகுறிகள் என்ன என்பது பற்றி தெரிந்திருக்க வேண்டும். அப்படி தெரிந்திருந்தால் மட்டுமே இந்த பாதிப்பினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதனின் தாக்கத்தை ஓரளவு குறைக்கலாம். அதனால் இந்த பதிவில் கண் நரம்பு பாதிப்பிற்கான அறிகுறிகள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் படித்துபயன்பெறுங்கள்=> மனிதன் ஒரு நாளைக்கு எத்தனை முறை கண்கள் சிமிட்டுகிறான் தெரியுமா
கண் நரம்பு பாதிப்பு அறிகுறிகள்:
இந்த கண் நரம்பு பாதிப்பினை ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் அதன் தீவிரத்தை குறைக்கலாம். ஆனால் அதற்கு முதலில் நாம் அனைவருக்கும் இந்த கண் நரம்பு பாதிப்பிற்கான அறிகுறிகள் என்ன என்பது பற்றி அறிந்திருக்க வேண்டும். இதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு காணலாம்.
கண் நரம்பு பாதிப்பு மற்றும் அடைப்பு ஏற்படும் பொழுது முதலாவது அறிகுறியாக விழித்திரையைச் சுற்றி திரவம் வழியக்கூடும்.
விழித்திரையின் நடுப்பகுதியை (Macula) சுற்றி இரத்தம் வழியக்கூடும்.
விழித்திரையின் நடுப்பகுதியை சுற்றி வீக்கம் ஏற்படும்.
எப்பொழுதும் இருப்பது போல் இல்லாமல் அதிகப்படியான தலைவலி ஏற்படுதல்.
கண் சிவந்து இருத்தல்.
மங்கலான பார்வை அல்லது பார்வையிழப்பு ஏற்படக்கூடும்.
மேலே கூறியுள்ள இந்த அறிகுறி உங்களுக்கு இருந்தால் உடனடியாக உங்களின் மருத்துவரை அணுகுங்கள்.
இதையும் படித்துபயன்பெறுங்கள்=> கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த டிப்ஸ் மட்டும் போதும்
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |