Fatty Liver Symptoms in Tamil
நம் முன்னோர்களின் காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தார்கள். அதனால் அவர்கள் எந்த விதமான மருந்து, மாத்திரைகளும் அதிகமாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் இன்றைய கால கட்டத்தில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவை விட மருந்து, மாத்திரைகளை தான் அதிகம் எடுத்து கொள்கின்றார்கள். நோய் வந்த பிறகு அதற்கா மருந்து, மாத்திரை சாப்பிடுவதை விட நோய் வருவதற்கு முன்னரே அதனை கண்டறிந்து சரி செய்வது சிறந்த ஒன்றாக இருக்கிறது. அதற்கு நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு நோய்க்கும் உள்ள அறிகுறிகளை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது நமக்கு ஜொரம் வர போகிறது என்றால் உடம்பு சோர்வாகும், சளி பிடிக்கும் இதை வைத்து நமக்கு ஜொரம் வர போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். அது போல ஒவ்வொரு நோய்க்கும் அறிகுறிகள் இருகிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் கல்லீரல் கொழுப்பு அறிகுறிகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க.
கொழுப்பு கல்லீரல் என்றால் என்ன.?
உடலில் உள்ள அதிகபடியான கொழுப்பானது கல்லீரலில் தேங்கி சேதமடைய செய்கிறது. இதை தான் கல்லீரல் கொழுப்பு என்று சொல்லப்படுகிறது.
கல்லீரல் கொழுப்பு அறிகுறிகள்:
பசியின்மை
அடிவயிற்றில் வலி
குழப்பமான மன நிலை
உடல் சோர்வு
பலவீனம்
கால்கள் மற்றும் கைகளில் ஏற்படும் வீக்கம்
மாதவிடாய் காலத்தில் வலி இல்லாமல் இருக்க இதை மட்டும் செய்யுங்கள்.!
கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கான காரணம்:
உடலில் அதிக கொழுப்பு
தூக்கத்தில் மூச்சுத்திணறல்
ஹைப்போ தைராய்டிசம்
வளர்சிதை மாற்றம்
இரத்தத்தில் அதிக அளவு ட்ரைகிளிசரைடுகள்
உடல் பருமன் அதிகமாக இருப்பது
சர்க்கரை நோய் பிரச்சனை
மது அருந்துதல்
மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனை இருந்தால் கல்லீரல் கொழுப்பு ஏற்படுகிறது.
நோயின் நிலைகள்:
நோயின் நிலைகள் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக கொழுப்பு கல்லீரலின் நிலையானது அறிகுறி இல்லாமல் ஏற்பட கூடியது. இதனை பரிசோதனையில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
இரண்டாம் நிலையானது வயிற்று வலி மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகள் வெளிப்படுகிறது. கல்லீரலில் சில அளவு கொழுப்புகள் நிறைந்துள்ளது.
கல்லீரலில் கொழுப்புகள் நிறைந்து வீக்கத்தை ஏற்படுத்தும், இந்த நிலையானது நோய் முடிஜி விட்டது என்பதை உணர்த்துகிறது.
கருப்பை இறக்கம் இருப்பதை காட்டும் அறிகுறிகள் என்ன..?
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |