Food Poison Symptoms in Tamil
பொதுவாக வீடுகளில் உணவு வீணாகிறதே என்று அதனை மீண்டும் மீண்டும் சூடுப்படுத்தி சாப்பிடுவார்கள். இதனால் அது புட் பாய்சன் ஆகிவிடும் நிலையை ஏற்படுத்தும். இது ஓரிரு நாட்களில் தானாக சரியாகிவிடும் தான் என்றாலும், உங்களுக்கு இது அசௌகரியத்தை ஏற்படுத்தும். அதனால் இந்த பதிவில் உங்களுக்கு புட் பாய்சன் ஆகிருப்பதை உணர்த்தும் அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
புட் பாய்சன் எதனால் ஏற்படுகிறது:
புட் பாய்சன் என்பது மாசுபட்ட உணவை உண்பதாலோ அல்லது சுத்தம் இல்லாத தண்ணீரில் இருக்கும் பாக்ட்ரியாக்கள் மற்றும் நுண்ணயிரிகளால் புட் பாய்சன் ஏற்படுகிறது. ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படுகிறது. சமைத்த உணவுகளை மீண்டும் மேம்படும் சூடுபடுத்தி சாப்பிடுவதால் புட் பாய்சன் ஏற்படுகிறது.
உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் என்னன்னு தெரிஞ்சுக்கோங்க..
காய்கறிகளை நறுக்கும்போது, சமைக்கும்போது, பரிமாறும்போது என எப்போது வேண்டுமானாலும் இப்படி உணவு நஞ்சாகலாம். அப்படி நஞ்சானதன் அறிகுறி நம் உடலில் தெரியும்போது அதை ஃபுட் பாய்சனிங் என்று உணர்கிறோம்.
குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடும் போது உணவு நஞ்சாக மாறுகிறது.
சமைக்கும் போது உணவுகளை சுத்தமாக சமைக்க வேண்டும். சமைக்கும் நபரின் கைகள் மற்றும் உணவில் சேர்க்கும் காய்கறிகளை சுத்தமாக சமைக்க வேண்டும்.
புட் பாய்சன் அறிகுறிகள்:
- வயிற்றுக்கோளாறு
- வாந்தி
- வயிற்றுப்போக்கு
- இரத்தம் தோய்ந்த மலத்துடன் வயிற்றுப்போக்கு
- வயிற்று வலி மற்றும் பிடிப்புகள்
- காய்ச்சல்
- தலைவலி
- பசியின்மை
மேல் கூறப்பட்டுள்ள அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுக வேண்டும். ஏனென்றால் புட் பாய்சன் நாளடைவில் இரைப்பை மண்டலத்தை பாதிக்க செய்கிறது.
நுரையீரல் செயலிழந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும்
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |