இரைப்பையில் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் என்ன..?

Advertisement

Gastric Cancer Symptoms in Tamil

அந்த காலகட்டத்தை விட இந்த காலகட்டம் ரொம்பவே மாறிவிட்டது என்றே சொல்லலாம். அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் இந்த காலம் அப்படி இல்லை. நாம் வாழும் இந்த அவசர உலகில் ஆரோக்கியம் என்பதே இல்லாமல் போய்விட்டது. வேலைக்கு செல்லும் அவசரத்தில் சிலர் சாப்பிடுவதையே மறந்து விடுகிறார்கள்.

அதனால் நோய் நம்மை தேடி வந்த காலம் மாறி நாம் நோயை தேடி போகின்றோம். அதுபோல சிலர் உடலில் ஏதாவது அறிகுறி இருந்தால் அதை மருத்துவரிடம் காமிக்காமல் அலட்சியமாக விட்டுவிடுகின்றோம். ஆனால் அப்படி செய்வது மிகவும் தவறான ஓன்று. அந்த வகையில் இன்று இரைப்பையில் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

மண்ணீரல் புற்றுநோய் அறிகுறிகள்

இரைப்பை புற்றுநோய் என்றால் என்ன..? 

இரைப்பை புற்றுநோய் என்றால் என்ன

இரைப்பைப் புற்றுநோய் இது Stomach Cancer அல்லது Gastric Cancer என்று அழைக்கப்படுகிறது. இது இரைப்பைச் சுவர்களில் இருந்து உருவாகும் ஒரு புற்று நோய் ஆகும். வயிற்றுப் புற்றுநோய்களில் பெரும்பாலானவை இரைப்பைப் புற்றுநோய்கள் ஆகும்.

உணவுச் செரிமான மண்டலத்தில் இரைப்பை ஒரு முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. செரிமான மண்டலத்தின் பிற முக்கிய உறுப்புகளாக வாய், நாக்கு, உணவுக்குழல், சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல், ஆசனவாய் ஆகியவை அடங்குகிறது.

இரைப்பை மூன்று அடுக்குத் தசைகளால் ஆனது. நாம் உண்ணும் உணவு இரைப்பையில் நன்றாக அரைக்கப்பட்டு கூழ் போல் மாற்றப்படுகிறது. பின் இது சிறு குடலுக்குச் செலுத்தப்படுகிறது.

வாயில் புற்றுநோய் வருவதற்கான சில அறிகுறிகள்

இரைப்பை புற்றுநோய் வர காரணம்: 

இரைப்பையில் புற்றுநோய் வருவதற்கு மது அருந்துதல், புகை பிடித்தல் மற்றும் மரபணு மாற்றம் போன்றவை பொதுவான காரணங்களாக இருக்கின்றன.

இரைப்பை புற்றுநோய் அறிகுறிகள்:

இரைப்பை புற்றுநோய் அறிகுறிகள்

 • உடல் சோர்வு
 • சாப்பிட்ட பிறகு வீங்கிய உணர்வு
 • நெஞ்செரிச்சல்
 • உணவு விழுங்குவதில் சிக்கல்
 • குமட்டல்
 • அஜீரணம்
 • வயிற்று வலி
 • வாந்தி
 • எதிர்பாராவிதமாக எடை இழப்பு
 • மேல் வயிற்று வலி
 • பசியிழப்பு
 • மலரில் இரத்தம்

மேல்கூறியவை இரைப்பை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாகும். மேலும், ஒரு நோயாளியின் உடலில் இரைப்பை புற்றுநோய் இருப்பதற்கு எந்தவொரு அறிகுறியும் இல்லாமலும் இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கல்லீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

 

இதையும் படியுங்கள்⇒ சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..!

 

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement