இதய அடைப்பு அறிகுறிகளில் இவை அனைத்துமே அடங்குமா..!

Advertisement

இதய அடைப்பு அறிகுறிகள் | Heart Block Symptoms in Tamil

மனிதனின் உடலில் காணப்படும் அனைத்து உடல் உறுப்புகளும் மிகவும் முக்கியமான ஒன்று. இத்தகைய உடல் உறுப்புகள் அனைத்தும் நாம் பிறக்கும் போது அளவில் மிகச் சிறியதாக இருக்கும். அதன் பிறகு மனிதர்களாகிய நாம் வளர்ச்சி அடைய அடைய நம்முடைய உடலில் உள்ள உறுப்புகளும் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். இவ்வாறு நம்முடைய உடலில் இன்றியமையாததாக காணப்படும் உறுப்புகள் அனைத்தும் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டும் நாம் நலமான வாழ்க்கை முறையினை வாழ முடியும். ஆனால் நம்முடைய உடலில் உறுப்புகளில் எண்ணற்ற நோய்கள் புதிதாக வந்து கொண்டே தான் உள்ளது. நமக்கு தான் அதற்கான காரணம், அறிகுறிகள் என இவை அனைத்தும் தெரிவது இல்லை. அதனால் இன்று இதய அடைப்பு ஏற்பவதற்கான அறிகுறிகளை பற்றி பார்க்கப்போகிறோம்.

எலும்பு புற்றுநோய் அறிகுறிகள்

இதய அடைப்பு என்றால் என்ன.?

பொதுவாக நம்முடைய இதயம் ஆனது அன்றாட வாழ்க்கையில் ஒரு நிமிடத்திற்கு சுமார் 60 முதல் 100 முறை வரை துடிக்கிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நம்முடைய இதயம் ஒவ்வொரு முறை துடிக்கும் போதும் இரத்தத்தை நமது உடலுக்கு அனுப்புகிறது.

இத்தகைய இரத்தம் ஆனது இதயத்தின் மேல் இருக்கும் வலது ஏட்ரியத்தில் நுழைந்து கீழே உள்ள வலது வென்ட்ரிக்கிள் வழியாக செல்லும் போது மின்துண்டல்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதுபோல ஏற்படும் போதும் இதயத்தின் ஒரு பகுதியில் அடைப்பு ஏற்படுகிறது. மேலும் இதயம் இரத்தத்தை பம்ப் செய்வதையும் தடுக்கிறது. இதுவே இதய அடைப்பு எனப்படும்.

மனித இதயத்தின் அறைகள் எத்தனை:

மனித இதயத்தில் மொத்தம் 4 வகைகள் உள்ளது.

  1. மேல் இடது ஏட்ரியா
  2. வலது ஏட்ரியா
  3. கீழ் இடது வென்ட்ரிக்கிள்
  4. வலது வென்ட்ரிக்கிள்

இதய அடைப்பு வர காரணம்:

 idhaya adaippu arikurigal tamil

இதய அடைப்பு நோயானது பெரும்பாலும் அனைத்து வகையான நபர்களுக்கும் வருவது இல்லை. அதாவது முன்பே இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் மற்றும் கரோனரி இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் இத்தகைய நோய் வருகிறது.

அதுமட்டும் இல்லாமல் நம்முடைய வயதானது அதிகரிக்க அதிகரிக்க உடலில் உள்ள உறுப்புகளின் செயல்பாடும் குறைந்து கொண்டே போகிறது. இதுபோன்ற காரணங்களால் தான் இதய அடைப்பு வருகிறது.

வெரிகோஸ் வெயின் நோயின் அறிகுறிகள் என்ன தெரியுமா

இதய அடைப்பு அறிகுறிகள்:

  • மூச்சுத்திணறல்
  • தலைசுற்றல்
  • நெஞ்சுவலி
  • உடலில் அதிகப்படியான சோர்வு
  • குறைந்த அளவு இதய துடிப்பு
  • மார்பக வலி

மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் அனைத்தும் இதயத்தில் அடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாகும். இத்தகைய அறிகுறிகள் இல்லாமல் வேறு ஏதேனும் அறிகுறிகள் உங்களுக்கு தோன்றினாலும் அதனை உடனே மருத்துவரிடம் கூற வேண்டும்.

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement