உங்கள் உடலில் இரத்தம் குறைவாக உள்ளதாய் உணர்த்தும் அறிகுறிகள் !

Advertisement

Hemoglobin Low Level Symptoms in Tamil

இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள்தான் நாம் சுவாசிக்கின்ற ஆக்சிஜனை உடலில் உள்ள அனைத்து  உறுப்புகளுக்கும் எடுத்து செல்கிறது. இந்த இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும் போது நமது உடலில் பல பிரச்சனைகள்  ஏற்படுகிறது. சில அறிகுறிகளை வைத்து இரத்தத்தில் உள்ள  சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்பதை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். இப்பதிவில் பார்க்க இருப்பது உடலில் இரத்தம் குறைவாக உள்ளதாய் உணர்த்தும் சில அறிகுறிகளை பற்றித்தான்!

சீரற்ற இதய துடிப்பு –  இதய துடிப்பானது திடிர்ரென்று அதிகமாகும் குறைவாகும். இதய துடிப்பின் வேகத்தில் மாற்றங்களை உணரலாம்.

 hemoglobin low level symptoms in tamil

இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதால் இதயத்திற்கு போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். அதனால் மூச்சு திணறல், சுவாசிக்க சிரமபடுதல்  படபடப்பு போன்ற அறிகுறிகள் காணப்படும்.

 hemoglobin low level symptoms in tamil

இதையும் படியுங்கள் => இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள் | Hemoglobin Increasing Food List in Tamil..!

இரத்த சோகை ஏற்பட இரும்பு சத்து குறைவாக இருப்பதும் ஒரு காரணமாகும். இதனால் தசைகள் பலவீனமாகி கை, கால்களில் அதிக வலி ஏற்படும் மற்றும் உடலானது சோர்வுடன் காணப்படும். ஆக்சிஜன் உடல் உறுப்புகளுக்கு சரியாக கிடைக்காதபோது சோர்வானது ஏற்படும்.

 hemoglobin low level symptoms in tamil

இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும் போது கண் மற்றும் பற்களின் ஈறுகளில் இரத்தம் இல்லாமல் வெளிர் நிறமாக இருக்கும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதன் காரணமாக மற்ற உள் உறுப்புகளுக்கு இரத்தம் திசை திருப்பப்படுகிறது. அதனால் இரத்தம் தோலின் மேல்பரப்பிற்கு சரியாக கிடைப்பதில்லை அதனால் தோலானது வெளிர் நிறத்திற்கு மாறுகிறது.

ratha sogai arikurigal in tamil

 

அடிக்கடி எளிதில் உடைய கூடிய நகங்கள், வெளிறிய தோல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து இரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.

சிராய்ப்பு – உடலில் ஆங்காங்கே சிராய்ப்புகள் ஏற்படும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதால் பிளேட்லெட்டுகளின் உற்பத்தியும் குறைகின்றது அதனால் சிராய்ப்புகள் ஏற்படுகின்றன. நாளைடைவில் இந்த சிராய்ப்புகள் காயங்களாக மாறி இரத்த கசிவினை கூட ஏற்படுத்தும்.

ratha sogai arikurigal in tamil

இதையும் படியுங்கள் => இயற்கை முறையில் இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி?

தலை வலி, மயக்கம், தலை சுற்றல், உற்சாகமின்மை, உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதற்கான அறிகுறியாகும்.

ratha sogai arikurigal in tamil

சிலர் காதுகளில் தேவையற்ற மெல்லிய சத்தங்களை உணர்வார்கள்.

வறண்ட வாய் வாயினை சுற்றி புண்கள் தோன்றுதல், நாக்குகளில் எரிச்சல் ஏற்படுதல்.

மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் இரத்ததில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதை உணர்த்தும் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.

இதையும் படியுங்கள் =>ஹீமோகுளோபின் குறைவு, இரத்த சோகை மற்றும் இரும்புச்சத்து குறைபாடு ஆகிய மூன்று பிரச்சனைக்கும் இந்த ஒரு பதிவு போதும்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement