Herpes Symptoms in Tamil
வணக்கம் நண்பர்களே..! பொதுவாக நாம் வாழும் இந்த அவசர உலகில் யாருக்கு என்ன நோய் வரும் என்று சொல்லவே முடியாது. அப்படி ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எங்கு பார்த்தாலும் புகை மண்டலம், காற்று மாசுப்பாடு, துரித உணவுகள் போன்றவற்றிற்கு இடையில் தான் நாம் வாழ்ந்து வருகின்றோம். சரி அதை விடுங்க..! தினமும் நாம் இந்த பதிவின் வாயிலாக ஒவ்வொரு நோய்க்கான அறிகுறிகளை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று ஹெர்பெஸ் நோய் என்றால் என்ன..? இந்த நோயின் அறிகுறிகள் என்ன என்று தெரிந்து கொல்லம் வாங்க..!
உங்க பிள்ளைகள் படிப்பில் மந்தமாக இருக்கிறார்களா.. அப்போ இதுவாக இருக்கலாம் என்னன்னு தெரிஞ்சுக்கோங்க |
ஹெர்பெஸ் நோய் என்றால் என்ன..?
ஹெர்பெஸ் வைரஸ் என்பது அக்கி எனப்படும் ஒரு தொற்று நோய் வகையாகும். இது வலிமிகுந்த கொப்புளங்கள் அல்லது புண்களை ஏற்படுத்தும் ஒரு பொதுவான தொற்று ஆகும். இது முதன்மையாக தோலில் இருந்து தோலுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது. இதனை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.
- Oral Herpes – இது முகம் அல்லது வாயில் ஏற்படலாம். இதனால் சிறிய புண்கள் அல்லது காய்ச்சல் கொப்பளங்கள் ஏற்படும். சில நேரங்களில் தொண்டை புண் ஏற்படும்.
- Genital Herpes – இது உடலுறவு கொள்ளும் போது பரவக் கூடியது. இது குறைவான அறிகுறிகளைக் கொண்டிருக்கும். இதனால் சிறிய புண்கள் ஏற்படும். அவை இரண்டு அல்லது நான்கு வாரங்களில் சரியாகிவிடும்.
இது பெரும்பாலும் வாய் சுற்றி உள்ள பகுதிகளில் ஏற்படுகிறது. இந்த நோய் இருந்தால் என்ன அறிகுறிகள் ஏற்படும் என்று கீழ் காணலாம்.
இரவு நேரத்தில் தாமதமாக தூங்குவதால் இதய நோய் ஏற்படுமா.. |
ஹெர்பெஸ் நோயின் அறிகுறிகள்..?
- காய்ச்சல்
- உடல் வலிகள்
- தொண்டை புண் (வாய்வழி ஹெர்பெஸ்)
- தலைவலி
- தொற்றுக்கு அருகில் வீங்கிய நிணநீர் முனைகள்
- தொடர்ச்சியான வலி
- கொப்புளங்கள் அல்லது புண்கள்
- கண் தொற்று
- வாய் அல்லது உதடுகளை சுற்றி புண்
மேலும் இதுபோன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனே மருத்துவரை அணுகி முறையாக சிகிச்சை பெறவேண்டும்.
இந்த அறிகுறிகள் இருக்கா.. அப்போ இரத்த உறைவாக தான் இருக்கும்
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |