உயர் இரத்த அழுத்தம் அதிகமானால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா.?

high blood pressure symptoms in tamil

உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் உயர் இரத்த அழுத்தம் அதிகமானால் உடலில் ஏற்படும் அறிகுறிகள் பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாகவே இது போன்ற இரத்த அழுத்தம் பிரச்சனைகள் இருதய நோயாளிகளுக்கு வரும் ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது.  இவை தமனி  சுவர்களுக்கு எதிராக இரத்தத்தின் சக்தி அதிகமாக இருக்கும் பொழுது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மேலும் இது போன்ற உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் பொழுது ஏற்படும் அறிகுறிகளை பற்றியும் உயர் இரத்த அழுத்தம் வருவதற்கான காரணங்களை பற்றியும் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

இரத்த அழுத்தம் குறைய பாட்டி வைத்தியம்..!

உயர் இரத்த அழுத்தம் அறிகுறிகள் | High Blood Pressure Symptoms in Tamil 

உயர் இரத்த அழுத்தத்திற்கு போதுமான அறிகுறிகள் எதுவும் வெளிப்படவில்லை. இருப்பினும் உயர் இரத்த அழுத்தத்தின் பொழுது இதயம் பெரிய பாதிப்பில்  உள்ளது. இது போன்ற கடுமையான பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு சில எச்சரிக்கை அறிகுறிகள் சொல்லப்படுகிறது. மேலும் அவற்றை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.

சுவாசிப்பதில் பிரச்சனை:

உயர் இரத்த அழுத்தத்தின் பொழுது நுரையீரலில் பிரச்சனைகள் ஏற்படும். இது போன்ற  பிரச்சனைகளால் மூச்சி விடுவதில்  அதிக சிரமம் ஏற்படும். மேலும் இதுபோன்ற நேரங்களில் நடைப்பயிற்சி செய்தாலும், மாடிப்படிகளில் ஏறினாலும் பல விளைவுகளை ஏற்படுத்துவதற்கு காரணமாக உள்ளது. மூச்சி விடுவதில் சிரமங்கள் ஏற்படும் பொழுது மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது, இல்லையென்றால் சுயநினைவை இழப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

தலைவலி பிரச்சனைகள்:

உயர் இரத்த அழுத்தத்தின் பொழுது எந்த விதமான அறிகுறிகளை காட்டவில்லை என்றாலும், ஒரு சிலருக்கு மூக்கில் இரத்தத்துடன்  தலைவலிகள்  ஏற்படும்.  இரத்த அழுத்தம் 180 / 120 mm hg அல்லது அதற்கு மேல் அதிகமாக இருந்தால் தலைவலி மற்றும் மூக்கில் இருந்து இரத்த கசிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பாக உள்ளது. எனவே இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை கேட்பது மிகவும் அவசியம்.

உயர் இரத்த அழுத்தம் தடுக்க:

  • உடல் எடையை பராமரிப்பதில் அதிக கவனம் தேவை. 
  • சுறுசுறுப்பான நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம். 
  • மது அருந்துவதை கட்டுப்படுத்துவது நல்லது. 
  • உணவுகளில் காய்கறிகளை அதிகம் சேர்த்து சாப்பிட வேண்டும்.
  • சத்துக்கள் நிறைந்த பழங்களை சாப்பிடுவது அவசியம்.

உயர் இரத்த அழுத்தம் வர காரணம்:

உயர் இரத்த அழுத்தம் வருவதற்கு முக்கிய காரணம் இரத்தத்தில் அதிகம் திரவம் காணப்பட்டால் இரத்த குழாய்கள் சுருங்குவதால், விறைப்பாக இருப்பதாலும் அல்லது இரத்த குழாய்களில் அடைப்புகள் ஏதும் இருந்தாலும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்