ஹை சுகர் இருப்பதற்கான அறிகுறிகள் | High Sugar Symptoms in Tamil..!
இந்த நவீன காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நபர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களோ இல்லையோ, ஆனால் மருந்து மாத்திரை இல்லாமல் வாழ்வது என்பது சற்று கடினமான ஒன்றாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக பல நபர்கள் சுகர், பிரஷர், தைராய்டு என இத்தகைய பிரச்சனைக்காக தான் அதிகமாக மாத்திரைகள் எடுத்திக்கொள்கிறார்கள். அதேபோல் பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த பிரச்சனை ஆனது காணப்படுகிறது. ஆகவே நமது உடல் ஆரோக்கியத்திற்கு எதிராக ஏதாவது ஒரு சிறிய அறிகுறிகள் தோன்றினாலும் கூட அதனை சாதாரணமாக விடாமல் எதற்கான அறிகுறிகள் என்று கவனித்து சிகிச்சை பெறுவது நல்லது. எனவே இன்றைய பதிவில் ஹை சுகர் இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
குழந்தைகளுக்கு டெங்கு அறிகுறிகள்
சர்க்கரை நோய் என்றால் என்ன..?
சர்க்கரை நோய் என்பது இரத்த ஓட்டத்தில் உள்ள சக்கரையை நமது உடலால் செயல்படுத்த முடியாத போது ஏற்படுகிறது. இதுவே இரத்த சர்க்கரை நோயாகும்.
இதில் லோ சுகர் மற்றும் ஹை சுகர் என இரண்டு வகையாக இருக்கிறது.
ஹை சுகர் சிம்ப்டன்ஸ்:
நமது உடலில் இரத்த சர்க்கரையின் அளவானது அதிகாமாக இருக்கிறதை என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் ஆனது உணர்த்துகிறது.
- உடல் சோர்வு
- கண் பார்வை மங்கலாதல்
- தலைவலி
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- வழக்கத்திற்கு மாறாக அதாவது அளவுக்கு அதிகப்படியான தூக்கம்
- அதிகமான தாகம்
ஹை சுகர் வரக் காரணம் என்ன..?
நமது உடலில் சுகர் இருப்பது தெரிந்தும் கூட அதற்கு சரியான முறையில் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவில்லை என்றால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரிக்க செய்யும்.
மேலும் மன அழுத்தமானது நமக்கு அதிகமாக இருந்தால் இரத்த சர்க்கரையின் அளவானது அதிகரிக்க செய்யும். மேலும் உணவு முறையினை பொறுத்தவரை மருத்துவர் கூறிய படி பின்பற்றவில்லை என்றால் பிரச்சனையாகி விடும்.
சுகர் உள்ளவர்கள் நடைபயிற்சி, உடல் பயிற்சி செய்யவில்லை என்றால் சுகரின் அளவானது அதிகரிக்க செய்யும்.
கருப்பை இறக்கம் இருப்பதை காட்டும் அறிகுறிகள் என்ன
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |