வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குடல் புற்றுநோய் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா.?

Updated On: June 27, 2023 6:04 AM
Follow Us:
Kudal Cancer Symptoms
---Advertisement---
Advertisement

Kudal Cancer Symptoms

நம் முன்னோர்களின் காலத்தில் யாருக்காவது ஒருவருக்கு புற்றுநோய் பிரச்சனை ஏற்படும். ஆனால் இன்றைய கால கட்டத்தில் பிறந்த குழந்தைக்கு கூட புற்றுநோய் ஏற்படுகிறது. புற்றுநோய்க்கான சிகிச்சைகள் இருந்தாலும் இதனை ஆரம்பத்தில் கண்டறிந்தால் தான் அதை முற்றிலும் குணப்படுத்த முடியும். இதில் நான்கு ஸ்டேஜ் உள்ளது. அதவாது முதல் ஸ்டேஜ் ஆக இருந்தால் ஹீமோதெரபி சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும், அதுவே இரண்டாவது ஸ்டேஜ் ஆக இருந்தால் ஹீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை மூலம் இரண்டும் செய்து குணப்படுத்த முடியும். மூன்றாவதாக ஸ்டேஜ் ஆக இருந்தால் ஆப்ரேஷன், ஹீமோதெரபி, கதிர்வீச்சு என அனைத்து சிகிச்சையும் செய்ய வேண்டியிருக்கும். நான்காவது ஸ்டேஜ் நோய் ரொம்ப முற்றிய நிலை இதை நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது.

இதில் ரொம்ப முக்கியமாக எந்த வகை புற்றுநோய் என்பதை பொறுத்து சிகிச்சைகள் மாறுபடும். முதலில் நமக்கு ஒவ்வொரு நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால் மட்டுமே அதனை ஆரம்பத்திலேயே கண்டறியலாம். அந்த வகையில் ஒவ்வொரு வகையான புற்றுநோய்க்கும் என்னென்ன அறிகுறிகள் என்று அறிந்திருக்க வேண்டும். இன்றைய பதிவில் குடல் புற்றுநோய் அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

குடல் புற்றுநோய் என்றால் என்ன.?

 குடல் புற்றுநோய் அறிகுறிகள்

உடலில் உள்ள பெருங்குடலில் உள்ள செல்கள் அதிகமாக வளர்ந்து கட்டியாக மாறுகின்றது. இதை தான் குடல் புற்றுநோய் என்று அழைக்கிறோம். எல்லா வகையான புற்றுநோய்க்கும் நான்கு நிலைகள் உள்ளது. அதே போலவே குடல் புற்றுநோய்க்கும் நான்கு நிலைகள் உள்ளது. மரபணு மாற்றம், வாழ்க்கை முறை, புகை பழக்கம், மது அருந்துதல் போன்ற பல்வேறு காரணங்களால் குடல் புற்றுநோய் ஏற்படுகிறது.

சிறுநீர்ப்பை இறக்கம் அறிகுறிகள் பற்றி தெரியுமா.?

குடல் புற்றுநோய் அறிகுறிகள்:

குடல் புற்றுநோயானது ஆரம்பநிலையில் எந்த அறிகுறியும் இல்லாமல் ஓரளவிற்கு வளர்ந்த பிறகு அதன் அறிகுறிகள் தென்படும். அவை என்னென்ன அறிகுறிகள் என்று பார்ப்போம்.

தொடர்ந்து வயிற்றுபோக்கு அல்லது மலம் கழிக்காமல் இருப்பது.

மலக்குடல் இரத்தப்போக்கு

மலம் கழிக்கும் போது இரத்தம் வருதல்

மலம் முழுமையாக கழிக்காதது போல் உள்ள உணர்வு

வாயு பிரச்சனை மற்றும் வயிற்று பிடிப்பு

உடல் சோர்வு

திடீரென எடை குறைவு

மலம் நிறம் மாறுப்பட்டு இருப்பது

மேல் கூறப்பட்டுள்ள அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் மருத்துவரை பார்ப்பது அவசியமானது.

இந்தெந்த அறிகுறிகள் இருந்தா அது தொழுநோயாம் அது என்னென்ன அறிகுறிகள் என்று தெரிந்து கொள்ளுங்க

ஃபைப்ராய்டு கருப்பை கட்டி அறிகுறிகள் என்ன தெரியுமா..?

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now