Kudal Problem Symptoms in Tamil
நம் உடலில் மிகவும் முக்கியமான உறுப்பு குடல் தான். நாம் தினமும் சாப்பிடும் உணவை செரிமானம் செய்து தேவையான சத்துக்களை உறிஞ்சி மீதமுள்ள கழிவுகளை வெளியேற்றுவதே இதன் வேலை. இத்தனை வேலைகளை செய்யும் குடலானது ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் உடலில் பல பிரச்சனைகள் வரக்கூடும். அதாவது நமக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு குடல் பிரச்சனையும் ஒரு காரணமாகும். எனவே குடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுக வேண்டும். குடலில் பிரச்சனை இருக்கிறது என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்று கேட்கறீர்களா.? குடல் பிரச்சனை இருந்தால் நமக்கு சில அறிகுறிகள் தோன்றும். அவற்றை பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
குடல் பிரச்சனை அறிகுறிகள்:
வாய் துர்நாற்றம்:
குடலில் பிரச்சனை உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகளில் முக்கியமானது வாய் துர்நாற்றம். குடல் ஆரோக்கியமாக இல்லையென்றால் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் அளவு குறைந்து கெட்ட பாக்டீரியாக்கள் அளவு அதிகரித்து காணப்படும். இதனால் வாயில் துர்நாற்றம் வீசக்கூடும். இவ்வகை துர்நாற்றத்தை மௌத் வாஸ் செய்தாலும் நீக்க முடியாது. வயிறு சுத்தமாக இருந்தால் தான் வாயில் துர்நாற்றம் வீசாது.
சரும பிரச்சனை:
உடலில் அடிக்கடி முகப்பரு மற்றும் சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சனைகள் தோன்றினால் அதற்கு குடல் பிரச்சனை தான் காரணமாக இருக்கும். அதாவது, குடலில் பிரச்சனை இருப்பவர்களுக்கு முகத்தில் அடிக்கடி முகப்பரு மற்றும் சொரியாசிஸ் போன்ற சரும பாதிப்புகள் ஏற்படும்.
கருப்பையில் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்
தூக்கமின்மை:
குடலில் பிரச்சனை இருந்தால் நாள்பட்ட தூக்கமின்மை மற்றும் சோர்வு நிலை போன்ற அறிகுறிகள் தோன்றும். எனவே இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகி குடல் பிரச்சனையை சரி செய்து கொள்ளுங்கள்.
மனநிலை மாற்றம்:
உங்கள் மனநிலை திடீரென்று எரிச்சல், கோபம், அமைதி, மகிழ்ச்சி போன்ற மனநிலைக்கு அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பதற்கு குடல் பிரச்சனையும் ஒரு காரணமாகும். ஏனென்றால் குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் டாக்ஸின்களை உற்பத்தி செய்கிறது. இது இரத்தத்தின் வழியாக மூளைக்கு சென்று மனநிலை மாற்றத்தை தூண்டுகிறது.
வயிற்று கோளாறுகள்:
குடல் பிரச்சனையின் முக்கிய அறிகுறிகளாக இருப்பது செரிமானமின்மை, நெஞ்செரிச்சல், உப்பசம், வாயு, வயிற்றுபோக்கு மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஆகும். இந்த அறிகுறிகள் அனைத்தும் அடிக்கடி தோன்றினால் அது குடல் பிரச்சனையின் தாக்கத்தை குறிக்கிறது.
குடல் புற்றுநோய் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா.?
உடல் பருமன்:
உடல் எடை அதிகமாக உள்ளவர்களின் குடலில் தான் கெட்ட பாக்டீரியாக்களின் அளவு அதிகமாக இருக்கிறது என்று ஆய்வில் கூறப்படுகிறது. இதனால் நம் உண்ணும் உணவு சரியாக செரிமானம் அடையாமல் இடையூறு ஏற்பட்டு உடல் எடை குறையாமல் இருக்கிறது.
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |