Liver Cancer Symptoms in Tamil
கல்லீரல் அல்லது ஹெபாடிக் புற்றுநோய் என்பது முதல் நிலை புற்றுநோயாகவோ அல்லது இரண்டாம் நிலை புற்றுநோயாகவோ இருக்கலாம். இதில் முதல் நிலை புற்றுநோய் என்பது கல்லீரலிலேயே தோன்றும். முதன்மை கல்லீரல் புற்றுநோய்களுள் அடங்குபவை: ஹெபடோசெல்லுலர் கார்சினோமா (ஹெச் சி சி), ஃபைப்ரோலாமெல்லர் புற்றுநோய், இன்ட்ராஹெப்டிக் கோலங்கிகோராரினோமா, கல்லீரல் அங்கியோரசோமா மற்றும் ஹெபடொபிளாஸ்டோமா. இரண்டாம் நிலை புற்றுநோய் என்பது பிற இடங்களுக்குத் தொடங்கி கல்லீரலில் பரவலாம். இதனை கல்லீரல் மாற்றிடம் புகல் புற்றுநோய் என்றும் கூறுவார்கள். முதல் நிலை புற்றுநோயை காட்டிலும் இரண்டாம் நிலை புற்றுநோய் தான் மிகவும் பொதுவாக ஏற்படும். பொதுவாக முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்றால் தொடர்ந்து ஏற்படக்கூடிய அழற்சி மற்றும் மது அருந்துதல் போன்றவற்றால் கல்லீரல் இழைநார் வளர்ச்சி ஏற்படுவதே ஆகும்.
முதன்மை கல்லீரல் புற்றுநோய் உலகளவில் ஆறாவது, மிக அடிக்கடி வரும் புற்றுநோயாகும். (6%) மேல் இந்த கல்லீரல் புற்றுநோயால் இறப்பதற்கான முக்கிய காரணம் முதன்மை கல்லீரல் புற்றுநோய் ஆகும். 2018 ஆம் ஆண்டில், இது 841,000 பேரைப் பாதித்தது. இதன் விளைவாக 7,82,000 பேர் இறந்தனர். 2015 இல் கல்லீரல் புற்று நோயால் ஏற்பட்ட இறப்புகளில் 2,63,000 மரணங்கள் ஹெப்படைடிஸ் பி-யால் ஏற்பட்டவை என்று கண்டறியப்பட்டது. இந்தப் புற்றுநோயின் நிலைகளைப் பொறுத்து அதற்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. அறுவைச் சிகிச்சை, இலக்கு சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை போன்ற பல வழிகளில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அதற்கு முன்னால் இந்த கல்லீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும். அதனால் கல்லீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகளை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
கல்லீரல் புற்றுநோய் அறிகுறிகள்:
கல்லீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகளை நாம் அறிந்திருப்பது மிகவும் அவசியமாகும். இந்த நோயின் அறிகுறிகள் தெரிந்திருந்தால் மட்டுமே அதன் ஆரம்ப நிலையிலேயே தடுத்து ஒரு உயிரை காப்பாற்றலாம். சரி வாங்க அது என்னென்ன அறிகுறிகள் என்று பார்க்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கொழுப்பு கல்லீரல் நோய் அறிகுறிகள்
இதற்கான அறிகுறி விலா எலும்புக் கூடுக்கு கீழே வலது பக்கத்தில் ஒரு கட்டி அல்லது வலி ஏற்படுதல்.
அடிவயிற்றில் வீக்கம் அல்லது வலி
மஞ்சள் நிறத் தோல் அல்லது அரிப்புத்தன்மை கொண்ட தோல்,
விவரிக்கப்படாத எடை இழப்பு,
பலவீனம் மற்றும் குமட்டல் ஆகியவை கல்லீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஆகும். இந்த அறிகுறிகளில் ஏதாவது ஒன்று உங்களுக்கு இருந்தாலும் அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |